கிறிஸ்து இரட்சிப்பை அருள சந்தித்த 7 இடங்கள்.. 7 places Jesus met for salvation plan..
7 places Jesus met..
கிறிஸ்து சந்தித்த 7 இடங்கள்..
1. Bethlehem..
பெத்லெஹம்..
But thou, Bethlehem Ephratah, though thou be little among the thousands of Judah, yet out of thee shall He come forth unto me that is to be ruler in Israel; whose goings forth have been from of old, from everlasting.
Micah 5:2
எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது.
மீகா 5:2
The place Saviour born..
இரட்சகர் அவதரித்த இடம்..
2. Jerusalem..
எருசலேம்..
From that time forth began Jesus to shew unto his disciples, how that He must go unto Jerusalem, and suffer many things of the elders and chief priests and scribes, and be killed, and be raised again the third day.
Matthew 16:21
அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்.
மத்தேயு 16:21
The place Sin crucified..
பாவம் அறையப்பட்ட இடம்..
3. Gethsamane..
கெத்சமனே..
Then cometh Jesus with them unto a place called Gethsemane, and saith unto the disciples, Sit ye here, while I go and pray yonder.
Matthew 26:36
அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி,
மத்தேயு 26:36
The place Sin Charged..
பாவம் சுமத்தப்பட்ட இடம்..
4. Gabbatha..
கபத்தா..
When Pilate therefore heard that saying, He brought Jesus forth, and sat down in the judgment seat in a place that is called the Pavement, but in the Hebrew, Gabbatha.
John 19:13
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.
யோவான் 19:13
The place Sin judged..
பாவம் நியாயம் தீர்க்கப்பட்ட இடம்..
5. Golgotha..
கொல்கொதா..
And He bearing his cross went forth into a place called the place of a skull, which is called in the Hebrew Golgotha:
John 19:17
அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.
யோவான் 19:17
The place Sin punished..
பாவம் தண்டிக்கப்பட்ட இடம்..
6. Sepulchre..
கல்லறை..
And He took it down, and wrapped it in linen, and laid it in a sepulchre that was hewn in stone, wherein never man before was laid.
Luke 23:53
அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
லூக்கா 23:53
The place sin buried..
பாவம் புதைக்கப்பட்ட இடம்..
7. Galilea..
கலிலேயா..
And go quickly, and tell his disciples that He is risen from the dead; and, behold, He goeth before you into Galilee; there shall ye see him: lo, I have told you.
Matthew 28:7
And they departed quickly from the sepulchre with fear and great joy; and did run to bring his disciples word.
Matthew 28:8
And as they went to tell his disciples, behold, Jesus met them, saying, All hail. And they came and held him by the feet, and worshipped him.
Matthew 28:9
சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அங்கே அவரைக் காண்பீர்கள், இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
மத்தேயு 28:7
அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
மத்தேயு 28:8
அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
மத்தேயு 28:9
The place of Joyous worship..
மகிழ்ச்சியான ஆராதனை ஸ்தலம்..
courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301
Comments
Post a Comment