இந்த மரம் இந்த வருஷமும் (2024 ) இருக்கட்டும்..


இந்த மரம் இந்த வருஷமும் (2024 ) இருக்கட்டும்
..

இயேசு கிறிஸ்துவுக்கு 6 மாதங்களுக்கு முன் 
பூமியில் பிறந்த யோவான் ஸ்நானகன் இவ்வுலகுக்கு அருளிய ஒரே அழைப்பு மனந்திரும்புங்கள்..

அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து. 
மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது எனறு பிரசங்கம் பண்ணினான். 
மத்தேயு 3:1-2

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திருப்பம் அதாவது மனந்திரும்புதல் அவசியமாகிறது..

இயேசு கிறிஸ்துவும் ...
நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.லூக்கா 5.32

லூக்கா 13 ம் அதிகாரத்தில்..
முதல் ஒரு சம்பவம் இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார்..

 பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான், அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள். 
லூக்கா 13:1

 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? 
லூக்கா 13:2

அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள். 
லூக்கா 13:3

இரண்டாவது ஒரு சம்பவத்தையும் குறிப்பிடுகிறார்..

சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே, எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? 
லூக்கா 13:4

அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்
லூக்கா 13:5

அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்:
 ஒருவன்( பிதா .. தேவன் )
 தன் திராட்சத்தோட்டத்தில்.                                     ( தேவனுடைய ராஜ்யம் )
      ஒரு அத்திமரத்தை ( புற ஜாதி )
நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. 
லூக்கா 13:6

திராட்சைத் தோட்டத்தில் திராட்சை செடிகள்.

 இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன், என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு. 
ஏசாயா 5:1

அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை  ( யூதர்கள்) நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார், அதுவோ.                                       ( யூதர்கள் ) கசப்பான பழங்களைத் தந்தது. 
ஏசாயா 5:2

இங்கே திராட்சைத் தோட்டத்தில் அத்தி மரம் தேவன் நடுகிறார்..
சபையில் தேவன்..
யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3.28

அப்பொழுது அவன் தோட்டக்காரனை.                 ( கர்த்தராகிய இயேசு கிறிஸ்து )
 நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன், ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். 
லூக்கா 13:7

அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும், நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, dig 
எருப்போடுவேன், dung 
லூக்கா 13:8

கொத்துகிறார்..Digging..
சிட்சிக்கிறார் ..
போதக சிட்சை..
அவர்கள் தங்களுக்கு நலமென்றுதோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள். இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஐனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். 
எபிரேயர் 12:10

எருப்போடுகிறார்..Dunging
நம்மோடு பேசுகிறார்..
கர்த்தருடைய வசனம்..
என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். 
யோவான் 15:2-3

கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். 
லூக்கா 13:9

இங்கே இரட்சிப்பின் நித்திய பாதுகாப்பு குறித்த கேள்வி எழுகிறது..
ஆனால் இரட்சிப்பின் நிச்சயம் இங்கே இழந்து போகிறது குறித்த சிந்தை அல்ல..
கனி கொடாதிருக்கிற நம்முடைய எந்த பகுதி இருக்கிறதோ அதை அவர் அறுத்து போடுகிறார்..

எங்கள் வீட்டில் நீண்ட காலமாக ஒரு மா மரம் ஏராளம் கனிகளை கொடுத்தது.. அதில் அனேக கிளைகள் காய்ந்து காணப்பட்டது.. ஒரு நாள் ஒரு பலத்த காற்று வீசியது.. எல்லா காய்ந்த கிளைகள் கீழே விழுந்தது.. காரணம் அந்த கிளைகள் கனி கொடுக்க சாத்தியம் இல்லை என்பதை எனக்கு வெளிப்படுத்தியது..


கனியற்ற நிலைக்கு என்ன காரணம்?

கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 5.11

 நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்.
தீத்து 3.14

இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.
2 பேதுரு 1.8

கனிகளில் 3 நிலைகள்..

1. கனி..
2. அதிக கனி
3. மிகுந்த கனி

என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். 
யோவான் 15:2

நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. 
யோவான் 15:5

நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். 
யோவான் 15:8

1. நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும்..

 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. 
யோவான் 15:5

2. கனிகள் நம்மில் உருவாக வேண்டும்..


இரண்டு சிறு பிள்ளைகள் தங்கள் வீட்டில் உள்ள ஒரு பிளம்ஸ் மரத்தில் விளையாடி மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்.. ஆனால் அந்த மரம் ஒரு நாளும் பூ பூத்து காய் காய்த்து பழம் பழுத்தது என்பதே இல்லை.. இந்த பிள்ளைகள் தகப்பன் ஒரு நாள் தன் பிள்ளைகளிடம் இந்த மரத்தை வெட்டி போட இன்று மாலையில் ஒருவரை அழைத்து வருகிறேன்.. இந்த மரத்தினால் ஒரு பிரயோஜனமும் இல்லையே என்று கூறி சென்று விட்டார்..
இந்த பிள்ளைகள் ஏறி மகிழ்ந்து விளையாடும் மரம் அல்லவா?
இதை வெட்டி போட பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லை..
இவர்கள் சந்தைக்கு சென்று 2 கிலோ பிளம்ஸ் பழங்களும் கொஞ்சம் நூல் கண்டும் வாங்கி வந்து தன் தகப்பனார் வரும் முன் மரத்தில் ஏறி மரம் முழுவதும் ஆங்காங்கே பிளம்ஸ் பழங்களை கட்டி வைத்தார்கள்..
பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருந்தது..
தகப்பனார் வந்தார்..
பிள்ளைகள் " அப்பா அப்பா பிளம்ஸ் மரத்தை வெட்ட வேண்டும்.. பாருங்கள் மரம் பழம் நிறைய பழுத்திருக்கிறது என்று மரத்தை காட்டினார்கள் ..
தகப்பன் தன் பிள்ளைகள் அறிவை கண்டு வியந்தார்..

பழங்கள் கனிகள் என்பது அதனதன் மரம் தியாகத்தினால் கனிகள் கொடுக்க வேண்டும் என்பதை பிள்ளைகள் அறிய முயற்சி செய்தார் தகப்பன்..

நற்கிரியைகளாகிய கனி கொடுப்போம்..

 சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், 
கொலோசெயர் 1:10

ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். 
எபேசியர் 5:9

உங்கள் கனிகளாகிய நற்கிரியைகள் உங்கள் உள்ளத்தில் கருத்தரிக்க வேண்டும்..

தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.
ஏசாயா 32.8

அதினதின் காலத்தில் அதினதின் கனிகள் மிக முக்கியம்..

இளம் வயது, வாலிப வயது, முதிர் வயது..

அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 
சங்கீதம் 1:3

மாய்மால வாழ்க்கை நிரந்தரமான கனிகளை கொடுக்க முடியாது..
நாளானது அதை விலங்கப்பண்ணும்..

எங்கள் வீட்டில் இருந்த மா மரம் அதிக கனி கொடுத்தது.. அனேகர் விரும்பி பயன் பெற்றார்கள்.. ஒரு நாள் யாரும் எதிர் பாராத நிலையில் அந்த மரம் அடியோடு சாய்ந்தது.. என்ன காரணம் என்று வேர் பகுதியை சோதித்த போது வேருக்குள் ஏராளம் பெரிய வண்டுகள் இருந்தது.. யாருக்கும் வெளியே தெரியாமல் அந்த நல்ல கனி கொடுத்த மரத்தை அடியோடு அழித்தது ..
மாய் மாலம் தேவன் விரும்புகிறதில்லை..

மாய் மாலம் புறிந்தோர்க்கு செம்மையாய் பதில் கொடுப்பார்.. இன்றே காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வாய் என்கிறது ஒரு பாடல்..


நித்தியத்திலும் கனிகள்..

நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும், அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.

வெளிப்படுத்தினத விசேஷம் 22


courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA