2024 வருடத்தின் ஆரம்ப நாட்களில் நம்மை நாமே.... சம்பாஷணை செய்து ஆராய்ந்து பார்ப்போம்..
புதிய வருடம் 2024 டைரியில் 366 பக்கங்கள் வெறுமை... நீங்கள் என்ன எழுத போகிறீர்கள்?
தேவ சித்தம் உங்கள் அனுதின வாழ்க்கையில் நிறைவேறுவது என்பது தேவ சத்தம் உங்களில் கேட்கவும் உங்கள் பதில் தேவனை சென்றடைவதும் பொறுத்தே அமையும்..
NEW YEAR 2024 DAIRY ALL 366 PAGES ARE EMPTY..What you are going to fill?
*Your response to divine call?*
God's eternal plan.?
*தெய்வீக அழைப்புக்கு உங்கள் பதில்* ?
" தேவனுடைய நித்திய திட்டம்?
1. *Moses..மோசே*
_Who am I,
நான் எம்மாத்திரம்?_
அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், *நான் எம்மாத்திரம்* என்றான்.
யாத்திராகமம் 3:11
And Moses said unto God, *Who am I,* that I should go unto Pharaoh, and that I should bring forth the children of Israel out of Egypt?
Exodus 3:11
*God's plan: Great Leader..*
தேவ திட்டம்: மகா பெரிய தலைவன்
2. *Jeremiah.. எரேமியா..*
_நான் சிறுபிள்ளையாயிருக்கிறேன்..
for I am a child.._
அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன், *சிறுபிள்ளையாயிருக்கிறேன்* என்றேன்.
எரேமியா 1:6
Then said I, Ah, Lord GOD! behold, I cannot speak: *for I am a child.*
Jeremiah 1:6
*God's plan: Great Prophet..*
தேவ திட்டம்: மகா தீர்க்கதரிசி
3. *Gideon..கிதியோன்*
_I am the least..
நான் எல்லாரிலும் சிறியவன்_ ..
அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன். இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது. *என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்* என்றான்.
நியாயாதிபதிகள் 6:15
And He said unto him, Oh my Lord, wherewith shall I save Israel? *behold, my family is poor in Manasseh,* and I am the least in my father's house.
Judges 6:15
*God's plan: Great Spiritual Soldier..*
தேவ திட்டம்: ஆவிக்குரிய போர் வீரன்
4. *Isaiah.. ஏசாயா..*
_I am a man of unclean lips..
நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்.._
அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், *நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்* , அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன், சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
ஏசாயா 6:5
Then said I, Woe is me! for I am undone; because *I am a man of unclean lips,* and I dwell in the midst of a people of unclean lips: for mine eyes have seen the King, the LORD of hosts.
Isaiah 6:5
*God's plan: Great Minister..*
தேவ திட்டம்: மகா பெரிய ஊழியன்
5. *Jonah..யோனா*
_Disobedient in action..
செயலில் கீழ்ப்படியாமை_ ..
அப்பொழுது யோனா *கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி,* தர்ஷீசுக்கு ஓடிப் போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக் கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
யோனா 1:3
But Jonah rose up to *flee unto Tarshish from the presence of the LORD,* and went down to Joppa; and He found a ship going to Tarshish: so He paid the fare thereof, and went down into it, to go with them unto Tarshish from the presence of the LORD.
Jonah 1:3
*God's plan: Great type for Jesus..*
தேவ திட்டம்: இயேசு கிறிஸ்துவின் ஒப்புமை
6. *Apostle Paul..*
*அப் பவுல்..*
_Lord, what wilt thou have me to do?
ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர்?_
அவன் நடுங்கித் திகைத்து; *ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர்* என்றான். அதற்குக் கர்த்தர்; நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
அப்போஸ்தலர் 9:6
And He trembling and astonished said, *Lord, what wilt thou have me to do?* And the Lord said unto him, Arise, and go into the city, and it shall be told thee what thou must do.
Acts 9:6
*God's plan: Great Apostle* ..
தேவ திட்டம்: மகா அப்போஸ்தலர்
*7.ஆபிரகாம்.. Abraham*
_லோத்தும் அவனோடேகூடப் போனான்..._
அழைத்த ஆண்டவர் சத்தத்தையே கேட்டு அதை மட்டும் செய்ய நம்மை ஆராய்ந்து பார்த்து ஒப்புக்கொடுப்போம்..
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான். லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.
ஆதியாகமம் 12:4
So Abram departed, as the LORD had spoken unto him; and Lot went with him: and Abram was seventy and five years old when He departed out of Haran.
Genesis 12:4
*God's plan: Great Spiritual Father..*
தேவ திட்டம்: ஆவிக்குரிய தகப்பன்
courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
meetshalomsteward@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment