வேதத்தில் ஸ்த்ரீயின் இரகசியம்.. ஏடு 1 THE MYSTERY OF WOMAN ( SHE ) IN THE BIBLE Volume 1



வேதத்தில் ஸ்த்ரீயின் இரகசியம்.. 
 THE MYSTERY OF WOMAN (SHE) IN THE BIBLE 

சாத்தானின் முதல் தகவல் பரிமாற்றம் ஸ்திரீ 

 தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. 
ஆதியாகமம் 3:1

சாத்தானின் இறுதி ஒப்புமை ஸ்திரீ 

 நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.
வெளிப்படுத்தின விசேஷம் 17.18

SHE sometimes used 
she
/ (ʃiː) /

pronoun(subjective)
refers to a female person or animal: she is a doctor; she's a fine mare

refers to things personified as feminine, such as cars, ships, and nations

=========================================

            *ROLE OF WOMEN* 1

         *ஸ்திரீயின் பங்கு* 1


1. *நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ* 

 _நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ_ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள். 
நீதிமொழிகள் 11:16

2. *குணசாலியான ஸ்திரீ..* 

 _குணசாலியான ஸ்திரீ_ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள். 
நீதிமொழிகள் 12:4

3. *கனம் பொருந்திய ஸ்திரீ..* 

அதனால் அவர்களில் அநேகம்பேரும் _கனம்பொருந்திய_ கிரேக்கரில் அநேக _ஸ்திரீகளும்_ புருஷர்களும் விசுவாசித்தார்கள். 
அப்போஸ்தலர் 17:12

4. *பரிசுத்த ஸ்திரீ..* 

இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த _பரிசுத்த ஸ்திரிகளும்_ தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். 
1 பேதுரு 3:5

 *குணசாலியான ஸ்திரீகள்..* 

இப்போதும் மகளே, நீ பயப்படாதே. உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன், நீ *குணசாலி* என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாம் அறிவார்கள். 
ரூத் 3:11

 *குணசாலியான ஸ்திரீயைக்* கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. 
நீதிமொழிகள் 31:10

 அநேகம் பெண்கள் *குணசாலிகளாயிருந்ததுண்டு* : நீயோ அவர்கள் எல்லோருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான். 
நீதிமொழிகள் 31:29

 *ஸ்திரீயின் பிறப்பும் பாவமும்..* 

என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் *உருவாக்கப்பட்டாள்* . 
1 தீமோத்தேயு 2:13

மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, *ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு* மீறுதலுக்கு உட்பட்டாள். 
1 தீமோத்தேயு 2:14

 *கொரிந்தியர் நிருபத்தில் அப் பவுல் ஸ்திரீயின் பங்கு..* 

1. *ஸ்திரீக்கு புருஷன் தலை..* 

ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும் _ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும்_ , கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். 
1 கொரிந்தியர் 11:3

2. *ஸ்திரீ புருஷனுடைய மகிமை..* 

புருஷனானவன் தேவனுடைய சாயலும் _மகிமையுமாயிருக்கிறபடியால்_ , தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை. _ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்._ 
1 கொரிந்தியர் 11:7

3. *ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்..* 

புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, _ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்._ 
1 கொரிந்தியர் 11:8

4. *ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.* 

புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, _ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்._ 
1 கொரிந்தியர் 11:9

5. *கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை..* 

 ஆகிலும் _கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை,_ புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை. 
1 கொரிந்தியர் 11:11

6. *புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்..* 

ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, _புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்._ சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது. 
1 கொரிந்தியர் 11:12

=============================

           *ஸ்திரீயின் பங்கு.. 2* 

             *_ROLE OF WOMEN.. 2_* 


 *ஸ்திரீயின் பாடுகள் மற்றும் பெலவீனங்கள்..* 

மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். 
1 தீமோத்தேயு 2:14

 *ஸ்திரீ மேல் தேவனுடைய கோபமும் கிருபையும்* 

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரியை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய். உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய். உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். 
ஆதியாகமம் 3:13-16

 *ராகேல் பிரசவத்தில் மரணம்..* 

பின்பு பெத்தேலை விட்டுப் பிரயாணம் பறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள். பிரசவத்தில் அவளுக்கு கடும்வேதனை உண்டாயிற்று. பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும்வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து, பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள். மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான். ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள். 
ஆதியாகமம் 35:19

 *விதவைகள்..* 

ரூத், 1 ராஜா 17.9, 2 ராஜா 4.1, மாற்கு 12.42, லூக் 2.37, 7.12, 18.3, அப் 6.1, 3

 *ஸ்திரீயின் பெலவீனங்கள்..* 

1. *எளிதில் பாவத்தில் விழக்கூடியவர்கள்..* 

ஆதி 3.6-7
சங் 3.6-7
நீதி 7.10

2. *நாகரீகத்தை அதிகம் விரும்புவர்கள்..* 

விலையுயர்ந்த ஆபரணங்கள் ஆடைகள் தவிர்க்க பவுல் நிருபத்தில் ஆலோசனை ஸ்திரீகளுக்கு வழங்குகிறார்.. 

3. *Women of curiosity..* 

 *எதையும் அறிய அதிக ஆர்வம் உள்ளவர்கள்..*

 ஆதி 3.1-6 ஸ்திரீ - சாத்தான் 
உரையாடல்.. 

4. *எதிர் காலம் குறித்து அதிகம் யோசிக்காதவர்கள்* ..

 *Not concerned about near future..* 

சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள், நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவி கொடுங்கள். நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள், திராட்சப்பலன் அற்றுப்போம், அறுப்புக்காலம் வராது. 
ஏசாயா 32:9-10

5. *விக்கிரகங்களுக்கு அதிகம் இழுக்கப்படுபவர்கள்..* 

 *Quick affinity to idols..* 

ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை. 
ஆதியாகமம் 31:34

6. *சீக்கிரம் தவறான தீர்மானம் எடுப்பவர்கள்..* 

 *Poor in discerning..* 

பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, 
எப்பொழுதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். 
2 தீமோத்தேயு 3:7

=============================

         *ஸ்திரீயின் பங்கு. 3* 

           *ROLE OF WOMEN. 3* 


 *ஸ்திரீகளுக்கு விலக்கப்பட்டவைகள்..* 

 _Some prohibitions Bible directs for Women.._ 

1. *Not to taste God not commanded..* 

 _தேவன் கட்டளையிடாத அனைத்தும் ருசி பார்க்க கூடாது.. .._ 

அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். 
ஆதியாகமம் 3:11-12

2. *Not to worship without head covering..* 

 _முக்காடிடாமல் தேவனை நோக்கி ஆராதிக்கவோ ஜெபிக்கவோ கூடாது_ .. 

ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள். 
1 கொரிந்தியர் 11:13

ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். 1 கொரிந்தியர் 11:10

3. *Not to cut their hairs short..* 

 _தலை மயிர் கத்திரிப்பது கூடாது.._ 

 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள். தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள். 1 கொரிந்தியர் 11:6

ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. 
1 கொரிந்தியர் 11:15

4. *Not to dress like men..* 

 _புருஷர்கள் உடை தரிக்க கூடாது.._ 

புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது, அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். 
உபாகமம் 22:5

5. *Not to usurp authority over men..* 

 _புருஷர் மேல் அதிகாரம் செலுத்த கூடாது.._ 

 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்கவேண்டும். 
1 தீமோத்தேயு 2:12

 But I suffer not a woman to teach, nor to usurp authority over the man, but to be in silence. 
1 Timothy 2:12

6. *Not to teach ( master ) in the assembly gathering.* .

 _சபை கூடிவருதலில் உபதேசம் பண்ண கூடாது.._ 

But I suffer *not a woman to teach* , nor to usurp authority over the man, but to be in silence. 
1 Timothy 2:12

 *Think..சிந்திக்க* .. 

Called To be chaste..

 _பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்_ .. 

அந்தப்படி மனைவிகளே உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். 
1 பேதுரு 3:1-2

=============================

       *ஸ்திரீயின் பங்கு.. 4* 

          *ROLE OF WOMEN.. 4* 

 *_மனைவியாக ஸ்திரீயின் பங்கு_* 

       *_ROLE OF WOMEN AS WIFE_* 


1. *ஏற்ற துணை* 

 *( Help meet )** 

பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, *ஏற்ற துணையை* அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். 
ஆதியாகமம் 2:18

 And the LORD God said, It is not good that the man should be alone; I will make him an *help meet for him.* 
Genesis 2:18

2. *தோழி.. உடன்படிக்கையின் மனைவி..* 

 *companion, and the wife of thy covenant.* 

ஏன் என்றுகேட்கிறீர்கள். கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார். *உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய* அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே. 
மல்கியா 2:14

Yet ye say, Wherefore? Because the LORD hath been witness between thee and the wife of thy youth, against whom thou hast dealt treacherously: yet is *she thy companion, and the wife of thy covenant.* 
Malachi 2:14

3. *புருஷனுக்கு கிரீடம்..* 

 *Crown to husband..* 

குணசாலியான ஸ்திரீ தன் *புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்* ; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள். 
நீதிமொழிகள் 12:4

A virtuous woman is a *crown to her husband:* but she that maketh ashamed is as rottenness in his bones. 
Proverbs 12:4

4. *மனைவி.. நன்மை..* 

 *Wife..A good thing..* 

மனைவியைக் கண்டடைகிறவன் *நன்மையானதைக் கண்டடைகிறான்;* கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான். 
நீதிமொழிகள் 18:22

அவள் உயிரோடிக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையல்ல, *நன்மையே செய்கிறாள்.* 
நீதிமொழிகள் 31:12

 Whoso findeth a *wife findeth a good thing* , and obtaineth favour of the LORD. 
Proverbs 18:22

 *She will do him good* and not evil all the days of her life. 
Proverbs 31:12

5. *மனைவி.. நம்பிக்கைக்கு பாத்திரமானவள்* .. 

 *Wife..Trust worthy..* 

அவள் புருஷனுடைய இருதயம் *அவளை நம்பும்:* அவன் சம்பத்துக் குறையாது. 
நீதிமொழிகள் 31:11

The heart of her husband doth safely *trust in her* , so that He shall have no need of spoil. 
Proverbs 31:11

6. *மனைவி.. குடும்பம் கட்டுபவள்..* 

 *Wife..A home keeper..* 

 தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், *வீட்டில் தரித்திருக்கிறவர்களும்,* நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு. 
தீத்து 2:5

To be discreet, chaste, *keepers at home,* good, obedient to their own husbands, that the word of God be not blasphemed. 
Titus 2:5

Vol 2 next blog..

courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
whatsapp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA