பாவம் செய்யாத பரிசுத்தவான்கள் vs பாவம் செய்யும் பரிசுத்தவான்கள்.. அப் யோவான் பார்வை.. distress of sincere christians
Distress of Sincere Christians over Sinful Christians..
பாவம் செய்யாத பரிசுத்தவான்கள் பாவம் செய்யும் பரிசுத்தவான்கள் மேல் வேதனை அடைகிறார்கள்..தங்களில் பாவம் இல்லை என்று எண்ணும் அல்லது தங்களில் உள்ள பாவத் தன்மை பற்றி awareness அதாவது விழிப்புணர்வு இல்லாத விசுவாசிகள் கவனத்திற்கு யோவான் அப்போஸ்தலர் 3 வசனங்கள் தன் நிருபத்தில் காண்பிக்கிறார்..
1.....
அவரில் நிலைத்திருக்கிற எவனும் *பாவஞ்செய்கிறதில்லை* . பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.
1 யோவான் 3:6
2....
தேவனால் பிறந்த எவனும் *பாவஞ்செய்யான்* , எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
1 யோவான் 3:9
3....
தேவனால் பிறந்த எவனும் *பாவஞ்செய்யானென்று* அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான். 1 யோவான் 5.18
இப்பொழுது இந்த வசனங்கள்
பாவம் செய்யாத பரிசுத்தவான்கள் பாவம் செய்யும் பரிசுத்தவான்கள் மேல் வேதனை அடைய காரணமாகிறது..
அதே யோவான் அப்போஸ்தலர் அதே நிருபத்தில் 3 வசனங்கள் குறிப்பிடுகிறார்..
1....
நமக்குப் *பாவமில்லையென்போமானால்* , நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
1 யோவான் 1:8
2.....
நாம் *பாவஞ்செய்யவில்லையென்போமானால்* , நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம். அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
1 யோவான் 1:10
3....
என் பிள்ளைகளே, நீங்கள் *பாவஞ்செய்யாதபடிக்கு* இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் *பாவஞ்செய்வானானால்* நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
1 யோவான் 2:1
இந்த இரண்டு பகுதிகளும் ஒன்றுக்கொன்று முரண்பாடு அல்ல..
இங்கே முரண்பாடு அல்ல..
John apostle makes a distinction between what is exceptional and what is habitual..
யோவான் அப்போஸ்தலர் இங்கே எது இயல்பு கடந்தது exceptional எது தொடர் பழக்கம் habitual என்பதை விளங்க வைக்கிறார்..
உண்மையான விசுவாசிகளுக்கு பாவம் ஒத்திசைவற்றது alien 👽 நீதியானது தனிச் சிறப்பு பண்பு charecteristic என்பதை நாம் அறிய வேண்டும்..
இந்த இரண்டு பகுதிகளும் நாம் நம் இரட்சிப்பை சந்தேகப்பட ஆவியானவர் எழுதவில்லை..
இதன் சாராம்சம் ரொம்ப இலகுவானது..
தேவனுடைய சித்தம் முழுக்க முழுக்க நாம் பாவம் செய்யக் கூடாது என்பதே..
ஆனால் துரதிர்ஷ்ட வசமாக பாவம் செய்கிறோம்.
பாவம் ஒரு பொழுதும் நம்மை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம்.
நாம் இரட்சிக்கபடுமுன் பாவத்தை பயிற்சி செய்து செய்தோம்.we practised sin
இப்பொழுதோ பாவத்தின் விளைவுகள் அறிந்து விலகி இருக்க போதிக்கப்படுகிரோம்..
அப்படி சூழ்நிலைகள் வரும் போது தருணம் வைக்கப்பட்டிருக்கிறது.. தருணத்தை பயன் படுத்துவோம்..
இந்த பாவ அறிக்கை ஒரு பாட வாசிப்பு அல்ல..
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
1 யோவான் 1:9
தீயணைப்புத் துறை இலவசமாக தீயை அணைத்து நிவாரணமும் வழங்குகிறது..
ஆகவே நம் வீட்டை தீ வைத்தால் என்ன? என்று கேட்கும் நிலை வேண்டுமா..
தான் பாவம் செய்யவில்லை என்று எந்த விசுவாசி கூறுகிறாரோ அவருக்கு பாவத்தின் தன்மையை குறித்து பூரணமில்லாத பார்வை கோணம் imperfect view இருக்கின்றது..
அவர் மேலோட்டமாக apparantly தேவனுடைய இயன் மதிப்பை standard வுணர்ந்தாரே அன்றி வேறில்லை ஏனென்றால் தேவனுடைய இயன் மதிப்பில் சிறு பிழை ஏற்பட்டாலும் அதுவும் பாவமே ..
அதன் அர்த்தம் ஒவ்வொரு நாளும் நம் சிந்தை, வார்த்தை, செயல் thought 🤔 word deed சிறு பிழையும் பாவமே..
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி
shalomjjj@gmail.com
whatsapp 91 9965050301
Comments
Post a Comment