தேவனுடைய தள்ளிவிடுதல் ஆபத்தானது? God's Reprobation (Condemnation) dangerous?




தேவனுடைய தள்ளிவிடுதல் ஆபத்தானது?
 God's Reprobation (Condemnation) dangerous?
========================================

தேவன் தள்ளிவிடுவாரா?
@ தேவன் தள்ளிவிட கூடாது என்கிற சில வேண்டுதல்களை காணலாம்..
சங் 43.2, 44.9, 44.22, 60.10, 71.9, 74.1, 77.7, 88.14, 89.38, 108.11

எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?
சங்கீதம் 108:11

 ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத்தள்ளிவிட்டீர், நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர்.
சங்கீதம் 89:38

உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
சங்கீதம் 51:11

@ தேவனுடைய தள்ளிவிடுதல் தேவனுடைய சர்வ ஞானத்திற்குட்பட்டிருக்கிறது.
ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய். ரோ11. 22

@ முதல் தள்ளிவிடுதல் இஸ்ரவேலை குறித்தது..
@ இந்த தள்ளிவிடுதல் இஸ்ரவேலுடைய கடின இருதயத்தை உருவாக்கியது..
 தேவன் ஒருவர் தள்ளப்படுவதற்கு காரணர் அல்ல..

இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.
ரோமர் 11:1

கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? அல்லவே. 
 கலா 2.17

 தேவனுடைய தெரிந்து கொள்ளுதலும் தேவனுடைய தள்ளிவிடுதலும் அவருடைய சர்வ ஞானம் ..
God’s election & God’s reprobation are His sovereignty

தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி:
ரோமர் 11:2

 தள்ளிவிடுதல் நிரந்தரம் அல்ல..

 அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது, மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ?
ரோமர் 11:15

@ தேவனால் தள்ளிவிடப்பட்டவர்களுடைய குணங்களும் கடின இருதயமும் காரணம்..

1. ஏசா தள்ளப்பட்டு யாக்கோபு தெரிந்து கொள்ளப்படுகிறான்

அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
ரோமர் 9:13
ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
ரோமர் 9:14

2. ரூபன் முதற்பேறானவன் ஆனால் யூதா கிறிஸ்து வம்சத்திற்கு தெரிந்து கொள்ளப்படுகிறான்.

 தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய். உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய். நீ அதைத் தீட்டுப்படுத்தினாய். என் படுக்கையின்மேல் ஏறினானே.
ஆதியாகமம் 49:4
 யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்?
ஆதியாகமம் 49:9
 சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை. ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
ஆதியாகமம் 49:10

3. சவுல் தேவனால் தள்ளப்பட்டு சாமுவேல் அபிஷேகம் பண்ணப்படுகிறான் .

கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய். நீ உன் கொம்பைத் தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா. பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன். அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
1 சாமுவேல் 16:1

4. செப்னா பொறுப்பு எலியாக்கீமுக்கு மாற்றப்படுகிறது.

ஏசா 22.15-25
சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைத்ததாவது: நீ அரமனை விசாரிப்புக்காரனும் பொக்கிஷக்காரனுமாகிய செப்னா என்பவனிடத்தில் போய்ச் சொல்லவேண்டியது என்னவென்றால்,
ஏசாயா 22:15
உன்னை உன் நிலையைவிட்டுத் துரத்திவிடுவேன், உன் ஸ்தானத்திலிருந்து நீ பிடுங்கிப்போடப்படுவாய்.
அந்நாளிலே இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து:
ஏசாயா 22:19-20
அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன், அவன் தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான்.
ஏசாயா 22:23

5. யூதாஸ் தள்ளப்பட்டு மத்தியா தெரிந்து கொள்ளப்படுகிறார்..

எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்து போன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக,
பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள். சீட்டு மத்தியாவின்பேருக்கு விழுந்தது. அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
அப்போஸ்தலர் 1:26

6. இரட்சிப்பை இஸ்ரவேல் தள்ளி  புறஜாதியான் வசம் அளிக்கப்படுகிறது..
ரோம 11.1

 இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.
அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்.
ரோமர் 11:12

 7. வஸ்தி ராஜாத்தி தள்ளப்பட்டு எஸ்தர் ராஜாத்தி ஆகிறாள் ..

ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப் பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்தது, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும்
எஸ்தர் 1:19
 ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான். சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது. ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரியாக்கினாள்.
எஸ்தர் 2:17


தேமா - மாற்கு

ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான். கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.
 லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா. ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.
2 தீமோத்தேயு 4:10-11

@ தேவனால் தள்ளிவிடப்பட்டவர்களுடைய கடின இருதயமும் காரணமும்..

இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின் தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.
எபிரேயர் 4.7

இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.
எபிரேயர் 3.15

உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
எபிரேயர் 3.13

வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளில் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.
எபிரேயர் 3.8

இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
சங்கீதம் 95.2

துன்மார்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்: செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான்.
நீதிமொழிகள் 21.29

அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
நீதிமொழிகள் 29.1

ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனிதோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்.
உபாகமம் 10.16

 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். 


அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல்ல ஆவியைக் கட்டளையிட்டீர், அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர். 

உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் சங்கீதம் 51. 11

தேவனுடைய தள்ளிவிடுதலை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?

SELF ANALYSIS சுய பரிசோதனை..

ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?
அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ?
தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா.)
அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.
சங்கீதம் 77.

1. பின்னானவைகளை மறந்து..
2. ஞானமாய் நடந்து..
3. பாடுகள் சகித்து..
4. மரணபரியந்தம் உண்மையாயிருந்து..
5. இனி வரும் மகிமையின் மேல் நம்பிக்கையாயிருந்து..
6. சட்டத்தின்படி மல் யுத்தம் செய்து..
7. இச்சையடக்கத்தோடு வாழ்ந்து..
தேவனுடைய தள்ளிவிடுதலை
 தவிர்ப்போம்..


courtesy
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA