_சுவிசேஷம் புறக்கணிப்போரின் எதிர் காலம் என்ன?_ _THE FUTURE DESTINY OF PEOPLE WHO REJECT GOSPEL_ ..

     
 _சுவிசேஷம் புறக்கணிப்போரின் எதிர் காலம் என்ன?_

 _THE FUTURE DESTINY OF UNBELIEVERS WHO REJECT GOSPEL_ .. 

அமெரிக்க தேசத்தில் ஒரு வினோதமான வழக்கு ஒன்று நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு என்னவென்றால் 4 பிரதான சாலை இணையும் ஒரு முக்கியமான சந்திப்பில் Junction ஒரு சிலுவை சின்னம் நாட்டப்படிருந்தது.. அதை அகற்ற வேண்டும்.. அது கிறிஸ்தவர்கள் சின்னம்.. மத சார்பற்ற இந்த நாட்டில் ஒரு மதத்தின் சின்னம் எப்படி பொது சின்னமாக கருத முடியும்..
ஆகவே அதை அகற்ற வேண்டும்..

வழக்கின் முடிவு தெரியவில்லை..
ஆனால் சிலுவை நாட்டப்பட வேண்டிய இடம் தங்கள் இருதயங்களில் என்பதை அந்த மனிதர் அறியாமல் அறிந்திருக்கிறார்..

சுவிசேஷ இயல் இவ்வாறு விளக்குகிறது* 

1. *இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்காதவர்கள்.* . 

ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன், நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் *உங்கள் பாவங்களிலே சாவீர்கள்* என்றார். 
யோவான் 8:24

2. *தீமைசெய்தவர்கள்* ..

 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் *ஆக்கினையை அடையும்படி* எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். 
யோவான் 5:29

3. *மனக்கடினம், குணப்படாத இருதயம் உள்ளவர்கள்* .. 

உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் *கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.* தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். 
சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். 
ரோமர் 2:5, 6, 8, 9

4. *தேவனை அறியாதவர்கள்,* *சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்* 

 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் *நீதியுள்ள ஆக்கினையைச்* செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். 
2 தெசலோனிக்கேயர் 1:7-8

5. *ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன்..* 

ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் *அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.* 
வெளிப்படுத்தின விசேஷம் 20:15

6. *சகோதரனை பகைத்ததினால் கிறிஸ்துவையும் புறக்கணித்தவர்கள்* .. 

 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற *நித்திய அக்கினியிலே போங்கள்.* அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார். 
மத்தேயு 25:40, 41, 46

7. *பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும்..* 

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய *அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்* என்றார். 
வெளிப்படுத்தின விசேஷம் 21:8

 *நற்செய்தி* .. 

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 
நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். 
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. 
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை, எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். 
ரோமர் 10:9-13


கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

https://chat.whatsapp.com/LBNKJHGYhEvJpeFD4XFEd8

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA