விழுந்து போன தாவீதின் கூடாரம் விளக்கம்...The fallen tabernacle of David


விழுந்து போன தாவீதின் கூடாரம் விளக்கம்...

The fallen tabernacle of David..


தாவீதின் கூடாரம் பற்றிய 5 வேத குறிப்புகளை முதலாவது பார்ப்போம் ..
வசனங்களை கவனமாக கவனியுங்கள்..

1. தாவீது போட்ட கூடாரம்..

கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாகப் பார்த்து, தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள். 
அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் இட்டான். 
2 சாமுவேல் 6:16-17

அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள். 
1 நாளாகமம் 16:1

2. தாவீதின் கூடாரத்தில் வீற்றிருப்பவர் பற்றிய தீர்க்கதரிசனம்..

கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும், நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார். 
ஏசாயா 16:5

3. விழுந்து போன தாவீதின் கூடாரம் பற்றிய ஆமோஸ் தீர்க்கதரிசனம்..

ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு, அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புக்களை அடைத்து, அதில் பழுதாய்ப் போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார். 
ஆமோஸ் 9:11-12

4. தாவீது விழுந்து போன கூடாரத்தை திரும்ப எடுப்பிக்க செய்த விண்ணப்பம்.. ஆனால் தாவீதினால் முடியவில்லை..

மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்தத் தேசத்தில் கொண்டுவந்து, தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள். 
இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான். சாலோமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். 
அப்போஸ்தலர் 7:45-48

5. புறஜாதிகள் யூதர்கள் ஒரே சரீரமாக இணைப்பில்தான் விழுந்து போன தாவீதின் கூடாரம் எடுப்பிக்கப்பட்டது..

எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிப்பிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு, நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ்செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. 
உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது. 
அப்போஸ்தலர் 15:15-18

---------------------------------------------------------------------------------

இப்பொழுது நாம் விவரமாக தியானிப்போம்..

அப்போஸ்தலர் 15 ம் அதிகாரம் ஆதி திருச்சபையில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு..

அப்போஸ்தலர் 2 : AD 33
அப்போஸ்தலர் 10/11 : AD 41-43
அப்போஸ்தலர் 15 : AD 50-51
மூன்று சம்பவங்களிலும் பேதுரு முக்கிய பங்கு வகிக்கிறார்..

விசுவாசத்தின் கதவு திறக்கிறது புறஜாதிகளுக்கு..

முதலில் பவுல் அதன் வழியாக பிரவேசித்து தேவன் தனக்கு கொடுத்த புறஜாதிகளின் அப்போஸ்தலர் என்பதை நிறைவேற்றுகிறர். 

 அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத்திறந்ததையும் அறிவித்து, 
அப்போஸ்தலர் 14:27

பவுல் முதலில் யூதர்களின் மத்தியில் தான் சுவிசேஷம் அறிவிக்க போகிறார்..
ஆகவே ஜெப ஆலயத்திற்கு தான் செல்வது வழக்கம்..

முன்பு யூதர்.. தேவ நியமம்...
 கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன், முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. 
ரோமர் 1: 16
ஜெப ஆலயங்களில் அடிக்கடி தேவ வசனம் கூறுகிறார்..
அப் 13.5, 13.15, 14.1, 17.1, 18.5, 19.8, 
ரோமர் 1.13-16, 2.9-10, 10.12

ஆனால் யூதர்கள் தங்களை தாங்களே அபாத்திரர் ஆக தீர்த்தார்கள் ..
அப் 13.46
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி; முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது. நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம். 
அப்போஸ்தலர் 13:46
அப் 28.25-29, 
ஏசாயா கூறுகிறார் கண்களினால் காணாமலும், உணராமலும் இருக்கிறார்கள் யூதர்கள்..

ஆனால் புறஜாதியர் ஞான நன்மைகளில் பங்கு பெறுகிறார்கள்..
ரோமர் 15.9-18, 27
புறஜாதியாரில் உண்டான சபை..
ரோமர் 16.4

பவுல் அழைக்கப்பட்ட ஒழுங்கை பார்ப்போம்..
அதற்கு கர்த்தர்; நீ போ. அவன்.      
 
1. புறஜாதிகளுக்கும் 
 2. ராஜாக்களுக்கும் 
 3. இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். 
அப்போஸ்தலர் 9:15

யூதர்கள் ஒரு பக்கம் மறுதலிக்கிரர்கள்..
புறஜாதியார் கிருபையால் தேவ வசனத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்..
எருசலேமில் முதல் ஆதி திருச்சபையில் ஆயிரக்கணக்கான யூதர்கள் இணைகிறார்கள் ..
புறஜாதியாரும் இணைகிறார்கள்..

ஆதித் திருச்சபை இப்பொழுது இடர் பெயர் நிலையில் இருக்கிறது..
Transition Period..
ஆதித் திருச்சபை பழைய ஏற்பாட்டு பிரமாணங்கள், சுத்திகரிப்பு, Gendered bondage அதாவது ஆண் பெண் அடிமைத்தனம் என்கிற நீண்ட கால நிலை இப்பொழுது  புதிய ஏற்பாடு கிறிஸ்துவில் சுயாதீனம் என்கிற முழுமைக்கு மாறிக்கொண்டிருக்கிற இடை பெயர் நிலை காலம் அது..
இப்பொழுது யூதர் புறாஜாதியர் என்கிற நிலை சத்தியத்தின்படி இணைந்திருந்தாலும் நடைமுறைப்படி இணைய முடியவில்லை..

இப்பொழுது அப் 15ம் அதிகாரத்தை  சிந்திப்போம்..

திருச்சபையில் மனிதர்கள் அல்லது திருச்சபையில் உள்ள சகோதரர்கள் பங்கு ரொம்ப முக்கியமானது..
Men are God's methods..
மனிதர்கள் தேவனுடைய முறைமைகள்..
But God not depend in Men..
ஆனால் தேவன் மனிதர்களை சர்ந்திருப்பவர் அல்ல..

அப் 15.1..

சிலர்.. சபையில் உள்ளவர்கள் யார் என்பதும் அவர்கள் பின்னணி குறித்தும் அறிவது அவசியம்.. முடிந்தால் அவர்கள் இதற்கு முன் இருந்த சபையில் பொறுப்பாளர்கள் மூலம் சிலர் என்பவர்களின் நன்னடத்தை குறித்து அறிந்து கொள்வது மிக அவசியம்..
commendation letter.. இவர்கள் மூலமாகவே துர் போதகம் சபைக்குள் வருகிறது..பொறுப்புள்ள தேவ பிள்ளைகள் கவனிக்க வேண்டும்..

1 சிலர் யூதேயாவிலிருந்து வந்து; நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள். 
அப்போஸ்தலர் 15:1

பவுல் பர்னபா.. துர் உபதேசம் சபையில் பரவாமல் தடுக்க ஆரோக்கியமான தர்க்கம் அவசியம்..

2 அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்தவேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள். 
அப்போஸ்தலர் 15:2

எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும்.. 
ஆதி திருச்சபை மூப்பர்கள் ஒரு மனம் மற்றும் சபையில் நடவடிக்கைகளை கையாளும் முறைமையை கவனியுங்கள்..

3 அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள். 
அப்போஸ்தலர் 15:3

4 அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபையாராலும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையெல்லாம் அறிவித்தார்கள். 
அப்போஸ்தலர் 15:4

பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் ..
இப்படிப்பட்ட சபை மனிதர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..
ஆவியின் படி தீர்ப்பு சொல்லாமல் தோற்றத்தின்படி தீர்க்கும் தலைமைத்துவம்..

5 அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள். 
அப்போஸ்தலர் 15:5

6 அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள். 
அப்போஸ்தலர் 15:6

பேதுரு..

7 மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி; சகோதரரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார். 
அப்போஸ்தலர் 15:7

8 இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்தஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக்குறித்துச் சாட்சி கொடுத்தார். 
அப்போஸ்தலர் 15:8

9 விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார். 
அப்போஸ்தலர் 15:9

10 இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன். 
அப்போஸ்தலர் 15:10

11 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான். 
அப்போஸ்தலர் 15:11

12 அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையையும் விவரித்துச் சொல்லக்கேட்டார்கள். 
அப்போஸ்தலர் 15:12

இயேசுகிறிஸ்துவின் சகோதரன் யாக்கோபு 

முக முக்கியமான தீர்வு இயேசு கிறிஸ்துவின் சகோதரன் யாக்கோபு கொடுக்கிறார்..

விழுந்து போன தாவீதின் கூடாரம் பிற ஜாதிகள் இணைப்பினல் திரும்ப கட்டப்படுகிறது என்பதை மிக அழகாக தெளிவாக கூறுகிறார்..
கவனியுங்கள்..

13 அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி; சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள். 
அப்போஸ்தலர் 15:13

14 தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே. 
அப்போஸ்தலர் 15:14

வாசியுங்கள்: லூக்கா 2. 27-35

15 அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது. 
அப்போஸ்தலர் 15:15


வாசியுங்கள்: ஆமோஸ் 9.11-15
ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு, அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புக்களை அடைத்து, அதில் பழுதாய்ப் போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார். 
ஆமோஸ் 9:11-12

16 எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிப்பிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு, 
அப்போஸ்தலர் 15:16

17 நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ்செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. 
அப்போஸ்தலர் 15:17

18 உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது. 
அப்போஸ்தலர் 15:18

19 ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும், 
அப்போஸ்தலர் 15:19

20 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருங்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன். 
அப்போஸ்தலர் 15:20

21 மோசேயின் ஆகமங்கள் ஒய்வுநாள்தோறும் ஜெபஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான். 
அப்போஸ்தலர் 15:21

இப்பொழுது யாக்கோபு கூறின வேத ஆலோசனை ஆவியின் ஏவுதலின்படி நிருபமாக எழுதப்படுகிறது..

 எவையெனில்

நான்கு அடிப்படை விஷயங்கள் யூதர்களும் புறஜாதிகளும் விலகி இருந்தால் போதும்..
very simple theology..

 1. விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும்,  
( abstain from idol )

 2. இரத்தத்திற்கும்
( abstain from flesh )

 3. நெருங்குண்டு செத்ததிற்கும்,    
                         ( abstain dead rituals)

  4. வேசித்தனத்திற்கும்
( abstain from wrong relationship)

நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே. 
 அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது. இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள். 
அப்போஸ்தலர் 15:28-29

சபை தேவன் தம்முடைய சுய இரத்தத்தினால் சம்பாதித்தது..
சபையில் ஏற்ற தாழ்வு மனப்பான்மை முற்றிலும் நீக்கப்படுகிறது..abolished..

மூன்று வசனங்களை கவனமாக சிந்திப்போம்..

1. அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். 
கொலோசெயர் 3:11

2. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். 
கலாத்தியர் 3:28

3. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை, எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். 
ரோமர் 10:12

அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமேஇல்லை.
ரோமர் 3.22

விழுந்து போன கூடாரம் திரும்ப கட்டப்பட்ட நிழல்..


1. மோசே
மேய்ப்பன்
தலைவன்
ஆசரிப்புக் கூடாரம் கட்டினான்
தள்ளப்பட்டான்
தேவன் உயர்த்தினர்..

2. தாவீது
மேய்ப்பன்
ராஜா 
தாவீதின் கூடாரம் கட்டினான்
தள்ளப்பட்டான்
தேவன் உயர்த்தினர்..

விழுந்து போன கூடாரம் திரும்ப கட்டப்பட்ட நிஜம்..

 இயேசு கிறிஸ்து
மேய்ப்பன்
ராஜா 
பெரிதும் உத்தமுமான கூடாரம் 
புறக்கணிக்கப்பட்டார்.
தேவன் உயர்த்தினர்..

நாமே கூடாரம்
நாமே ஆலயம்..

வாசியுங்கள் இந்த பகுதியை..
1 கொரி 6. 15-20
1 கொரி 3.16-17

courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301













Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA