இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷன்.. மேஜை நினைவு கூறுதல் தியானம்
இயேசு கிறிஸ்து_ என்னும் ஒரே மனுஷன்..
ஆராதனை என்பது 3 அம்சங்களை உள்ளடக்கியது.
1. சபை கூடி வருதல் meeting together
2. கிறிஸ்துவின் மரணம் நினைவு கூறுதல் remembrance of Lord's death
3. அப்பம் பிட்குதல் breaking of bread
ஒன்று இல்லை என்றாலும் முழுமையான ஆராதனை அல்ல..
பிதாவாகிய தேவனுடைய அன்பையும் குமாரனாகிய தேவனுடைய சிலுவை மரணத்தையும் பரிசுத்த ஆவியாகிய தேவனுடைய நிறைவினால் கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்டுக்கொள்ளப்பட்ட சபை நினைவு கூறுதல் ஆராதனை ஆகும்..
வாரத்தின் முதல் நாள் ஓய்வு நாள் அல்ல..கர்த்தருடைய நாள் அல்ல.. கிறிஸ்துவின் நாள் அல்ல..( கூறினால் குற்றம் அல்ல )
இது ஆண்டவருடைய பாடு மரணம் உயிர்த்தெழுதல் நினைவு கூறும் நாள்..
*தியான வசனம்...*
ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் *இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய* கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
ரோமர் 5:15
*தியானிப்போம்* ..
1. *ஒரே மீறுதல்..*
ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், *ஒருவனுடைய மீறுதலினாலே* அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
ரோமர் 5:15
2. *ஒரே குற்றம்..*
மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு *ஒரே குற்றத்தினிமித்தம்* ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.
ரோமர் 5:16
3. *ஒரே மனுஷனாலே பாவம்..*
இப்படியாக, *ஒரே மனுஷனாலே* பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
ரோமர் 5:12
4. *ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமை* ..
அன்றியும் *ஒரே மனுஷனுடைய* கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
ரோமர் 5:19
_காய்பா கூறுவதை கவனியுங்கள்_ ..
1. *ஒரே மனுஷன் மரிக்க வேண்டும்* ..
ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு *ஒரே மனுஷன்* ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.
யோவான் 11:50
2. *ஒரே மனுஷன் சாகிறது நலம்* ..
ஜனங்களுக்காக *ஒரே மனுஷன்* சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
யோவான் 18:14
_தேவனுடைய இரட்சிப்பின் ஒரே திட்டம்._ ..
1. _தேவனை வெளிப்படுத்திய ஒரேபேறான குமாரன்._ .
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற *ஒரேபேறான குமாரனே* அவரை வெளிப்படுத்தினார்.
யோவான் 1:18
2. _உலகத்தில் அன்பு கூர்ந்த ஒரேபேறான குமாரன்.._
தேவன், தம்முடைய *ஒரேபேறான குமாரனை* விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
யோவான் 3.16
3. _நாம் பிழைக்கும்படிக்கு அனுப்பப்பட்ட ஒரேபேறான குமாரன்.._
தம்முடைய *ஒரேபேறான குமாரனாலே* நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
1 யோவான் 4.9
*ஒரே பலி..*
1. _செலுத்தப்பட்ட ஒரே பலி.._
இவரோ, பாவங்களுக்காக *ஒரே பலியைச்* செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,
எபிரேயர் 10.12
2. _பூரணமாக்கின ஒரே பலி.._
ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை *ஒரே பலியினாலே* இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
எபிரேயர் 10.14
*ஆராதனை சிந்தை..*
அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.
1 கொரிந்தியர் 10.17
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301
Comments
Post a Comment