தேவன் மகா பரிசுத்தர்.. அவரை நாம் பரிசுத்தம் பண்ணவோ பரிசுத்த குலைச்சல் செய்யவோ முடியுமா?
2 வசனங்களை கவனியுங்கள்..
அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான், ஆரோன் பேசாதிருந்தான்.
லேவியராகமம் 10:3
நீங்கள் இந்த சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,
உபாகமம் 32:50
ஆராதிக்கும் தேவன்
பரிசுத்தராகிய தேவனுடைய காட்சியை கண்ட பொழுது ஏசாயா என்ற தீர்க்கதரிசி நான் அதமானேன் என்றே கூறுகிறார். 2 பெரிய குணாதிசயங்கள் கர்த்தரின் தனித்தன்மையாக காணப்படுகின்றன. முதலாவது தேவனாகிய கர்த்தர் எல்லாம் அறிந்தவர்.
இரண்டாவது தேவனாகிய கர்த்தர் எல்லாம் வல்லவர்.
அவரது கண்களுக்கு மறைவானது ஒன்றுமே இல்லை.
மனுஷனுக்குள் இருப்பதை அவர் அறிந்திருக்கிற படியினால் மனுஷரை குறித்து எவரிடமும் அவர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியதும் இல்லை.
ஆரோனை அவர் அறிவார்.
அவனுடைய நான்கு பிள்ளைகளையும் நன்கு அறிவார்.
ஆசரிப்பு கூடாரத்தின் ஆராதனை முறைமைகளை நம்பி கொடுப்பதற்கு முன்னர் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லியே கொடுத்தார்.
கேட்கிறதற்கு காது உள்ளவன் கேட்கக் கடவன் என்று அவர் கூறவில்லை.
நான் சொன்னபடி செய்யாதவன் சாக கடவன் என்றே கூறினார்.
லேவியர் ஆகமம் 8 9 10 மிக முக்கியமான. அதிகாரங்கள் என்று நாம் சிந்தித்தோம். இன்று பத்தாம் அதிகாரத்தில் ஒரு பகுதியை சிந்திப்போம்.
ஒன்பதாம் அதிகாரத்தில் மகிழ்ச்சியான ஒரு சம்பவம் நடைபெறுகிறது.
பத்தாம் அதிகாரத்தில் ஓர் சோக சம்பவம் இடம்பெறுகிறது.
ஆரோனின் முதல் ரெண்டு குமாரர்கள் அதை உருவாக்கினார்கள் .
அவர்கள் மறைந்து போனார்கள்.
லேவியராகமம் 10 .1,2 வசனங்கள் நமக்கு மிகுந்த துக்கத்தை கொடுக்கும் வசனங்கள். ஆரோனின் குடும்பம் யாத்திராகமம் 6 23 அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம்பண்ணினான். இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
யாத்திராகமம் 6:23
தேவ அழைப்பில் பட்சபாதம் இல்லை..
தேவனுடைய பரிசுத்தத்தை காணும் சிலாக்கியத்தை நான்கு குமாரரும் பெற்றார்கள் முழு குடும்பமும் தேவ அழைப்பு பெற்றார்கள்.
எபிரேயர் 10 . 31-ல் ஜீவனுடைய தேவனின் கைகளில் விழுவது பயங்கரமாக இருக்கும். எபிரேயர் 12. 21 இல் நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லத் தக்கதாக பரிசுத்தரின் காட்சியும் பணியும் பயங்கரமானது.
கர்த்தருடைய பணியில் ஒரு சிறு கவனக்குறைவும் உயிரையே பறித்து விடும் என்பதை நாம் இந்த வசனங்களில் பார்க்கின்றோம்.
பரிசுத்தமான இடத்தில் பரிசுத்தமான சேவையில் பரிசுத்தவான்கள் நடுவில் இருந்த இரண்டு இளம் பணிவிடையாளர்களின் அகத்தில் எப்படி இந்த சோக சம்பவம் நடக்கும் அளவிற்கு ஒரு பாவம் நுழைந்து விட்டது.
தீமையை பார்க்க மாட்டாத சுத்த கண்ணன் முன்பாக இரண்டு இளைஞர்கள் தீமை செய்வதற்கு துணிகரம் கொண்டார்கள். லேவியராகமத்தின் மையமான வசனம் நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்பது.
அதனை ரெண்டு லேவியர்களே மீறி விட்டார்கள்.
அவர் பரிசுத்தம் உள்ள தேவன்.
எரிச்சல் உள்ள தேவன். உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னிக்க மாட்டார் என்று யோசுவா 24 19 கூறுகிறது.
மாய்மால ஆராதனை..
இப்படிப்பட்ட போதனைகள் சுயஇஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.
கொலோசெயர் 2:23
அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியர்களை தேவன் அழித்துப் போடும் அளவிற்கு அவர்கள் இருவரும் செய்த பாவம்தான் என்ன?
முதலாவது தன் தன் தூப கலசத்தை எடுத்துக் கொண்டார்கள்.
இரண்டாவது ரெண்டு பேர் சேர்ந்து தூப கலசம் எடுத்தனர்.
மூன்றாவது தூபம் முறைப்படி செய்யப்படவில்லை. காரணம் அவர்கள் கையில் இருந்தது தன் தன் தூப கலசம். மனிதனின் சொந்த அறிவுகளும் மனிதனின் சொந்த திட்டங்களும் பரிசுத்தரின் சமூகத்தின் முன் நிற்க முடியாது.
நான்காவது கர்த்தர் கட்டளை இடாத அந்நிய அக்கினியை பயன்படுத்தினார்கள்.
ஐந்தாவது அவர்கள் ஆண்டவர் சன்னதிக்கு கொண்டு செல்ல மோசேயிடம் அனுமதி கேட்கவில்லை. ஆரோனிடமும் அனுமதி பெறவில்லை.
ஆறாவதாக அவர்கள் செய்த தப்பிதம் தூப கலசத்துடன் கர்த்தருடைய சன்னிதியை சேர குறிப்பிட்ட ஒரு நேரத்தில் சேராமல் தங்கள் சொந்தமான நேரத்தில் துணிந்து எடுத்தார்கள்.
ஏழாவதாக மது அருந்தி இருந்தார்கள்.
அது சுய அறிவை இழந்துவிட்டார்கள் என்பதை காட்டுகிறது.
எனவே இஷ்டமான ஆராதனையை துவங்கி விட்டார்கள் .
மாயமான ஒரு தாழ்மையை உலகத்திற்கு அவர்கள் காட்டினார்கள் .
மாம்சத்தை பேணிக் கொண்டார்கள். பரிசுத்தத்தை துச்சமாக மாற்றி விட்டார்கள்.
புதிய ஏற்பாட்டின் காலத்தில் பரிசுத்த ஆவியானவர் அக்கினியாக அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் இறங்கினார் என்று வேதம் கூறுகிறது .
ஆனால் ஐந்தாவது அதிகாரத்தில் தானே தவறிய அனன்யா சப்பிராள் என்ற தம்பதிகளை அதே அக்கினி அழித்தும் விட்டது .
மிக சீக்கிரத்தில் தானே இந்த ரெண்டும் இடம் பெற்றன.
@ பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என்று பரிசுத்தராகிய தேவனுக்கு எதுவும் இல்லை
@ தேவன் பழைய ஏற்பாட்டில் எவ்வளவு பரிசுத்தரோ அதேபோன்று புதிய ஏற்பாட்டிலும் பரிசுத்தராகவே இருக்கிறார்.
@ பழைய ஏற்பாட்டின் காலத்திலும் புதிய ஏற்பாட்டின் காலத்திலும் மனிதர் தன்னை பரிகாசம் பண்ண தேவன் இடம் கொடுத்ததே இல்லை .
மனிதன் எதை விதைக்கின்றானோ அதையே அறுப்பான்.
FIRE FOR ACCEPTANCE.. 🔥
ஏற்றுக்கொள்ளும் அக்கினி..
அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது, ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.
லேவியராகமம் 9:24
FIRE FOR DISAPPROVAL 🔥
நிராகரிக்கும் அக்கினி..
அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.
லேவியராகமம் 10:2
source@nej
courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
whatsapp: +91 9965050301
Comments
Post a Comment