இந்த வாரம் சபைக்கு செய்தி.. *தன் சகோதரன்.. .*
*தன் சகோதரன்.. .*
*His brother..*
*I யோவான் நிருபத்தின் கதிர்கள்..*
*தன் சகோதரனை பகைக்கிறவன்* .. .
1. _இருளில் இருக்கிறான்.._
ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் *தன் சகோதரனைப்* பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
1 யோவான் 2:9
2. _இருளில் நடக்கிறான்.._
*தன் சகோதரனைப்* பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான். இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.
1 யோவான் 2:11
3. _தேவனால் உண்டானவன் அல்ல.._
இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும் *தன் சகோதரனில்* அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.
1 யோவான் 3:10
4. _மனுஷ கொலை பாதகன்.._
*தன் சகோதரனைப்* பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
1 யோவான் 3:15
5. _பொய்யன்_ ..
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், *தன் சகோதரனைப்* பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
1 யோவான் 4:20
6. _நித்தியஜீவன் நிலைத்திராது_ ..
*தன் சகோதரனைப்* பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
1 யோவான் 3:15
7. _மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்_ ..
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். *சகோதரனிடத்தில்* அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.
1 யோவான் 3:14
*விசுவாசிகளுக்கு தன் சகோதரனுடன் உள்ள பொறுப்புகள்* ..
1. _வேண்டுதல்செய்யக்கடவன்_ ..
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை *தன் சகோதரன்* செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார். யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே. மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
1 யோவான் 5
2. _அன்புகூரவேண்டும்_ ..
தேவனிடத்தில் அன்புகூருகிறவன் *தன் சகோதரனிடத்திலு* ம் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.
1 யோவான் 4.2
*தன் சகோதரனிடத்தில்* அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான். அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.
1 யோவான் 2.10
3. _இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொள்ள கூடாது_ ..
ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, *தன் சகோதரனுக்குக்* குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
1 யோவான் 3.17
4. _கொலை செய்ய கூடாது.._
பொல்லாங்கனால் உண்டாயிருந்து *தன் சகோதரனைக்* கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம். அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.
1 யோவான் 3.12
*Closing thought..*
*இப்படியிருக்க* ,
1. _தடுக்கலையும் இடறலையும் போடலாகாது.._
நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் *தன் சகோதரனுக்கு* முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
ரோமர் 14.13
2. _வஞ்சியாமலும் இருக்கவேண்டும்_ ..
நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,
தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் *தன் சகோதரனை* வஞ்சியாமலும் இருக்கவேண்டும். முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
1 தெசலோனிக்கேயர் 4.6
3. _குற்றப்படுத்துகிறவன் நியாயாதிபதியாயிருப்பாய்_ ..
சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, *தன் சகோதரனைக்* குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.
யாக்கோபு 4.11
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment