தலைமைத்துவத்தின் உள்ளங்கை நிரப்பப்படுதல்...



தலைமைத்துவத்தின் உள்ளங்கை நிரப்பப்படுதல்...

Brown-Driver-Briggs
H3709. kaph
כַּף‎192 noun feminine1 Kings 8:54 hollow, or flat of the hand, palm, sole of foot, pan (Late Hebrew id.; Aramaic id., Assyrian kappu, hand, pan, kippatu, hollow; Arabic palm, hand) — absolute ׳כ‎ Job 29:9

 பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
யோபு 29:9

கர்த்தரின் உள்ளங்கை..
இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்,
ஏசாயா 49.16a
And so God says about His people, “I have engraved you on the palms of my hands,”

பழைய ஏற்பாட்டில் “உள்ளங்கை” ஆசாரித்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது..

லேவியராகமம் 8:25, 26 ஆகிய வசனங்களில் பிரதிஷ்டையில் பலியின் கொழுப்பு பகுதிகளும் முன்தொடை பகுதிகளும் எடுக்கப்படுவதையும் அத்துடன் புளிப்பு இல்லாத அப்பங்களின் கூடையில் இருந்து ஒரு அதிரசமும் ஒரு அடையும் எடுக்கப்படுவதையும் நாம் பார்க்கலாம்.
27 ஆவது வசனத்தில் அவைகள் அனைத்தும் ஆரோனின் உள்ளங்கைகளில் வைக்கப்படுகின்றது என்பதை நாம் பார்க்கலாம். 
ஆரோனின் உள்ளங்கை நிரப்பப்படுகின்றது பிரதிஷ்டை என்று யாத்திராகமம் 29.9 ல் ஒரு வார்த்தை வருகின்றது. 
ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி, அவன் குமாரருக்குக் குல்லாக்களையும் தரித்து, இப்படியே ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டைபண்ணுவாயாக
யாத்திராகமம் 29:9

இந்த அதிகாரத்திலும் பிரதிஷ்டை என்ற அந்த வார்த்தை வருகின்றது இரண்டு இடத்திலும் பிரதிஷ்டை என்பதை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்பட்ட எபிரேய சொல் டெர்ரூபா “ terufah” என்ற ஒரே சொல் ஆகும். 
அந்த எபிரேய சொல்லிற்கு சரியான பொருள் என்ன என்றால் உள்ளங்கை நிரப்பப்படுதல் என்பது ஆகும். 
அதே நிரப்பப்படுதலை இங்கு ஆரோனுடைய உள்ளங்க கைகளில் அனைத்தையும் வைப்பதில் இருந்து நாம் அறிந்து கொள்ளுகின்றோம். 
உண்மையாக ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட எந்த முழு நேர ஊழியரின் கைகளிலும் இந்த அதிகாரங்கள் இன்றும் கொடுக்கப்பட்டு கொண்டே இருக்கின்றது. 
உள்ளங்கை நிரப்பப்படுதல் தேவ அதிகாரம் கொடுக்கப்படுவதையும் தேவ ஆசீர்வாதம் ஊற்றப்படுவதையும் மட்டுமல்ல இறுதியாக இன்னும் ஒன்றையும் அது குறிக்கின்றது. தேவ ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட தேவ ஊழியக்காரனுக்கு அது ஒரு எச்சரிப்பாகவும் அமைகின்றது. 
தேவ எச்சரிப்பு வழங்கப்படுவதை அறிவிக்கின்றது.
ஆசாரியர்களிடம் வேதம் இல்லாமல் போகும் என்றால் ஆசாரியர்கள் உதடுகள் அறிவை காக்காமல் போகும். 
ஆசாரியரிடம் வேதம் இல்லாமல் போகும். ஆசாரியர்களின் உதடுகள் அறிவை காக்காமல் போகும் என்றால் கர்த்தர் கட்டளை இடாதவைகள் கர்த்தர் கட்டளையிட்டார் என்று ஆசாரியர்கள் கூறுவார்கள் என்றால் சாபமும் சாபமே அவர்களுடைய முடிவாக மாறும் என்பதை அந்த உள்ளங்கை நிரப்பப்படுதல் எடுத்துக் கூறுகிறது.

லேவி 8 . 27, 28.. அவைகளை எல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் குமாரருடைய உள்ளங்கைகளிலும் வைத்து அசைவாட்டும் பலியாக கர்த்தருடைய சன்னதியில் அசைவாட்டி பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து பலிபீடத்தின் மேலிருக்கிற தகன பலியின் மேல் தகனித்தான் .
அவைகள் சுகந்த வாசனையான பிரதிஷ்டை பலிகள். இது கர்த்தருக்கு தகன பலியானது. பின்பு மோசே மார்க்கண்டத்தை எடுத்து அதை கர்த்தருடைய சன்னதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான் கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்காயிற்று. 

ஆரோனின் உள்ளங்கைகளில் வைக்கப்பட்ட பிரதிஷ்டை பலிகள்  தேவனால் அங்கீகரிக்கப்பட்டதை இங்கு அறிகிறோம். இங்கு ஆரோன் முற்றிலும் பரிசுத்தமாக்கப்பட்டான் என்பதற்கு ஒரு அடையாளமாக மாறிவிட்டது.
 மோசே முட்ச்செடியில் பெற்ற ஒரு தரிசனத்தில் ஆவிக்குரிய வாழ்வின் உச்சகட்டத்தை அடைந்தான். 
ஆரோன் ஒரே நாளில் அதை பெற்றுக்கொள்கிறான். 
லேவியராகமம் 8.  35 

தலைமைத்துவம் சபையில் காவலாளி..
நீங்கள் சாகாத படிக்கு ஏழு நாள் இரவும் பகலும் ஆசரிப்பு கூடார வாசலில் இருந்து கர்த்தருடைய காவலை காக்க கடவீர்கள் இப்படி நான் கற்பிக்கப்பட்டேன் என்றான்.

 நீங்கள் சாகாதபடிக்கு என்று மோசே ரெண்டு மிக முக்கிய குறிப்புகளை அவர்களுக்கு இந்த வசனத்தில் கூறுகின்றார்.

1. முதலாவது குறிப்பு ஆசாரியா ஊழியத்திற்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட நீங்கள் ஆசரிப்பு கூடாரமாகிய ஆலய வாசலை விட்டு நீங்கவே நீங்க வேண்டாம் என்று கூறுகிறார். நீதிமொழிகள் 8.34
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான். 
நீதிமொழிகள் 8:34

2. மோசே கூறும் இரண்டாவது குறிப்பு கர்த்தரின் காவலை காக்க கடவீர்கள்.

 கர்த்தரின் ஊழியம் மகத்துவமானது .
அது ஒருவர் தானாக தன்னை உட்படுத்திக் கொள்வது அல்ல .
ஆரோனை போல அழைக்கப்பட்டு கீழ்ப்படிவது ஆகும்.
 கமாலியலின் பாதங்கள் அல்ல கர்த்தரின் பாதங்களே புதிய ஏற்பாட்டில் சவுலை பவுலாக்கி விட்டது.
 பரிசுத்தரின் சேவைக்கு இதயங்கள் பக்குவப்பட பள்ளிக்கூடங்கள் உலகத்தில் இல்லை பரிசுத்தரின் காலடிகளே அதற்கு துணையாக நிற்கின்றது.
 கலை க்கூடங்கள் அல்ல கல்வாரிக் கூடமே இணையாக நிற்கின்றது.
 மனிதரின் விரிவுரைகள் அல்ல தேவனின் அறிவுரைகளை ஊழியக்காரர்களை ஆயத்தப்படுத்துகின்றது.
 கர்த்தர் மோசையை கொண்டு கட்டளையிட்ட எல்லா காரியங்களையும் ஆரோனும் அவன் குடும்பத்தாரும் செய்தார்கள் என்று           லேவி 8. 36 இல் வசனம் நிறைவு பெறுகிறது.

1. உள்ளங்கையில் ( ஆராதனை முறைமைகள்..)
லேவி 8.25-28

2. உள்ளங்கையில் எண்ணெய்.                            ( ஆவியானவர்)
லேவி 14.17,18,28,29

3. உள்ளங்கை மேகம்..( விசுவாசம்)
1 ராஜா 18.44

4. உள்ளங்கையில் ஜீவன்..                                     ( மறுபடி புதுப்பிக்கப்படுதல் )
2 ராஜா 4.34

சகோதரரே..
நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
சங்கீதம் 26:7
I wash my hands in innocence, and go about your altar, LORD...

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA