சபையின் தலைமைத்துவத்தின் அபிஷேகம்.
சபையின் தலைமைத்துவத்தின் அபிஷேகம்.
வாசிக்க லேவி 8.1-5 வசனங்கள்.
லேவியர் ஆகமம் 8 ம் அதிகாரம் வேதத்தில் மிக முக்கியமான அதிகாரம் ஆகும். ஆரோனும் அவனுடைய குமாரர்களும் பிரதிஷ்டை பண்ணப்படுகிறார்கள்.
இந்த ஒழுங்கு முறைகள் சபையின் தலைமைத்துவத்தின் அபிஷேகத்தின் நிழலாக இருக்கிறது.
இன்று லேவியராகமம் 8 ம் அதிகாரம் 1 முதல் 5 வசனங்கள் தியானிக்கலாம்.
ஆரோனும் அவனுடைய குமாரர்களும் பிரதிஷ்டை செய்யப்படுகிறார்கள்.
ஆரோன் என்ற ஆசாரியன் உத்தம பிரதான ஆசாரியனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருக்கிறான்.
அவனது குமாரர் ஆசாரியர்கள் .
பரிசுத்த பேதுரு கூறுவது போல ஆவிக்கு ஏற்ற பலிகளை செலுத்தும் படிக்கு பரிசுத்த ஆசாரிய கூட்டமாக கூட்டப்படும் விசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கின்றார்கள்.
லேவியராகமம் எட்டாவது அதிகாரம் முதல் வசனத்தில் கர்த்தர் மோசையை நோக்கி என்றும் இரண்டாம் வசனத்தில் நீ என்றும் துவங்குவது தேவனுக்கும் மோசேயிற்கும் இருந்த மிக நெருங்கிய தொடர்பை காட்டுகின்றது.
நீ என்பது மோசே அவனைத் தவிர வேறு எவரிடமும் தேவன் பேசவும் இல்லை. காரணம் அவனைப் போல் உத்தமமாக தன்னைப் பின்பற்றிய எவரையும் இதுவரை தேவனுடைய கண் காணவில்லை.
சபையின் பொறுப்புகள் மனிதர் முறைமை அல்ல..
மோசேயின் பொறுப்புகள் பகிர்ந்து கொடுக்கப்படாத பொறுப்புகள்.
அவனது மாமன் எத்திரோ அவரது பொறுப்புகளை நல் மனம் நல் மனசாட்சி நல்லறிவு படைத்தவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும்படி கூறினார்.
இதனை யாத்திராகமம் 18 ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.
எத்திரோ கூறியபடி நல் மனம் நல் மனசாட்சி நல்லறிவு பெற்றவர்கள் எவரும் இல்லை என்பதை யாத்திராகமம் 32 இல் பார்க்கிறோம்.
பரிசுத்தராகிய தேவனின் பொறுப்புகளை பகிர்ந்து கொடுக்க கர்த்தாதி கர்த்தரே கட்டளையிட வேண்டும் மனிதன் அல்ல எத்திரோவும் அல்ல. நீ என்று ஆண்டவர் மோசைக்கு கட்டளை கொடுத்தார் .
முச்செடியில் கூப்பிட்ட ஆண்டவர் திரும்பத் திரும்ப மோசையை கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்.
ஆரோனை கூப்பிடு என்கிறார் அவனது குமாரரை கூப்பிடு என்கிறார் சபையரைக் கூப்பிடு என்கிறார்.
இதுவரை மோசேயிடம் மட்டும் கூப்பிட்டு பேசிய அனைவரும் கூப்பிடும்படி கூறுகின்றார் .
அது மட்டுமல்ல வெறும் கையாக எவரும் வர வேண்டாம் என்றும் கூறுகிறார்.
வஸ்திரங்களையும் அபிஷேக தைலத்தையும் பாவம் நிவாரண பலி செலுத்த ஒரு காளையும் ஒரு கூடையில் புளிப்பு இல்லாத அப்பங்களையும் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று கூறுகிறார்.
தனக்கு கட்டளையிட்ட படியே மோசே செய்தான் .
இந்த ஒரே அதிகாரத்தில் மட்டும் ஒன்பது முறை இந்த வாக்கியம் வருகின்றது.
கர்த்தருக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு கர்த்தர் தொடர்ந்து பொறுப்பு தருகிறார்..
கர்த்தர் தான் சொல்லுகிறபடி செய்கிறவர்களிடம் தொடர்ந்து அதிகமாக செய்வதற்கு சொல்லிக்கொண்டே இருப்பார். தம்மை நம்பி கீழ்ப்படிகிறவர்களிடம் அதிகமாக பொறுப்புகளை தருவார்.
அப்படி செய்வதற்கு தவறுகிறவர்களிடம் பேசுவதையே நிறுத்தி விடுவார்.
கர்த்தர் கட்டளையிடாத எதையும் சபை மக்களுக்கு மோசே கூறியதே இல்லை சபை மக்களுக்கு ஒளித்து மோசே எதுவும் செய்ததும் இல்லை.
கர்த்தர் கட்டளையிட்டதை மட்டுமே மோசே கூறினான் .
மக்களிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை என்றால் கர்த்தரிடம் பேசுவதற்கு மோசே சென்று விடுவான்.
இதற்கு முன்பும். ஒருமுறை சபை மக்களை வந்து கூடும்படி மோசே கூறியதை யாத்திராகமம் 35 ஆம் அதிகாரம் முதல் வசனத்தில் வாசிக்கிறோம் .
அப்பொழுது செயலாற்றலுக்கு சபை மக்களை மோசே அழைத்தான் .
இப்பொழுது ஆராதிப்பதற்கு அழைக்கின்றான் .
ஜனங்களின் பிரதிநிதிகளாக கர்த்தர் முன் நிற்க ஆசாரியர்கள் பிரதிஷ்டை செய்யப்பட போகிறார்கள் .
சபையாரின் கூடுகைக்கு முன்பாக ஆராதனை முறை செவ்வையாய் செய்ய வேண்டிய ஆசாரியர்கள் அபிஷேகம் பண்ணப்பட வேண்டும்.
ஆரோன் எவ்வளவு பெரிய தவறு செய்து இருந்தாலும் தொடர்ந்து அவனையே ஆசாரியனாக வைக்க தேவன் சித்தம் கொண்டார் .
தேவனுடைய இரக்கம் தேவ கிருபை அளவற்றது ஆழம் அறியாதது என்பதை ஆரோன் போன்ற ஒரு பாவி ஆசாரிய பட்டம் பெற அழைக்கப்பட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
யாத்திராகமம் 32 ஆம் அதிகாரத்தில் கன்று குட்டி வணக்கத்திற்கு கட்டளை கொடுத்தவன்.
ஆவியோடும் உண்மையோடும் மட்டுமே ஆராதிக்கக்கூடிய ஜீவன் உள்ள தேவனுக்கு ஆராதனை நடத்த கட்டளை பெறுகிறான்.
அது கிருபையிலும் கிருபை இரக்கத்திலும் இரக்கம் தயவிலும் மகா தயவு, பரிசுத்தராகிய கர்த்தர் பாவிகளை நேசிக்கிறார் ஏற்றுக்கொள்கிறார்.
தமது ஊழியத்தில் அவர்களை பெருமளவில் பயன்படுத்த விரும்புகிறார் என்பதை இதிலிருந்து அறியும் பொழுது நமது உள்ளம் நடுங்குகிறது கண்கள் குளமாகிறது.
பரிசுத்த தகப்பனே நாங்கள் நல்லவர்கள் இல்லாவிட்டாலும் எங்கள் ஒவ்வொருவர் மேலும் நீர் காட்டும் அன்பிற்கு எப்படி பதில் கொடுப்போம் என்று நம் மனம் ஏங்குகிறது.
ஆரோனின் வாழ்வில் யாத் 32 ஆம் அதிகாரத்தில் தவறியது போல பின்வாங்கிய வாழ்வு அதற்கு பின்னர் வரவே இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் மோசையுடன் இணைந்து செயலாற்றும் ஒருவனாக ஆரோன் மாறிவிட்டான்.
@sourcenej
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
whatsapp: +91 9965050301
Glory to God. Thank you for the valuable God's WORD, brother
ReplyDelete