தலைமைத்துவம் தவறும் போது..( பொறுப்புள்ள தேவ பிள்ளைகள் பாவம் செய்யும் போது)



அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள். 
நீதிமொழிகள் 29:12

லேவியராகமம் 4 22-ல். ஒரு பிரபு தவறினால் என்று எழுதப்பட்டுள்ளதன் பொருள் 12 கோத்திரங்களின் தலைவர்களில் ஒரு தலைவன் தவறிவிட்டால் என்பது ஆகும். மேலும் எண்ணாகமம் 16.2  இஸ்ரவேல் புத்திரர் சபைக்கு தலைவர்களும். சங்கத்திற்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களும் ஆகிய 250 பேர் என்று ஓர் குறிப்பு வருகின்றது. 
பொறுப்பில் இருப்பவர் தவறி விட்டால் செய்ய வேண்டியது இங்கு கூறப்படுகிறது. அவர்கள் பிரபுவாக இருக்கலாம். தலைவர்களாக இருக்கலாம். 
பரிசுத்தர் ஆகிய தேவனின் நீதியானது எவ்வித பட்ச பாதமும் இல்லாத நீதியாகும். தலைவன் சாதாரண மனிதன் என்ற வித்தியாசத்தை தேவன் பாவத்தை பொருத்தமட்டில் பார்ப்பது இல்லை. 
பாவம் செய்யும் போது அபிஷேகம் பண்ணப்பட்டவன் பிரபு சபையார் கோத்திரத்தின் சாதாரண மனிதன் அனைவருமே தங்கள் மேன்மையை இழந்து பாவி என்ற பெயரை ஏகமாக பெற்றுக் கொள்கின்றார்கள். 
பாவத்தில் விழுந்துவிட்ட பின்னர் நேற்று வரை இருந்த பரிசுத்தம் இன்று கை கொடுக்க முன் வருவதும் இல்லை. 
கடந்த கால நல் மதிப்புகள் கயிலாக தருவதும் இல்லை. 
பாவம் அத்தனை கொடூரமானது. பிரபுவாகிய ஒருவன் தன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறினால். ..
இந்த தேவனுடைய வார்த்தையை கவனிப்போம். 
தேவ கட்டளைகளை மக்கள் கை கொள்ளுவதற்கு காவலாளியாகவும் ஆலோசகனாகவும் உதவியாளனாகவும் இருக்க வேண்டியவன் கட்டளைகளை மீறுகிறான். 
அவன் மீறும்பொழுது அவனது மீறுதல் அவனுக்கு அடியில் இருக்கின்றவர்களை கட்டளைகளை மீறும்படி தூண்டி எழுப்புகிறது. 
சகலமும் ஒழுங்கும் கிரமமாக செய்யப்பட வேண்டிய தேவ நிர்வாகம் சகலத்திலும் ஒழுங்கினமாக மாறிவிடுகிறது. 
பிரபு அறியாமல் செய்தான். 
செய்யத் தகாததை செய்தான். 
ஆபத்துக்கு உட்பட்டான். 
குற்றவாளி ஆனான் என்ற நான்கு குறிப்புகளை 22 ஆவது வசனம் தெரிவிக்கின்றத

அறியாமல் செய்தான்.
 பாவத்தின் விளைவுகளை சற்றும் சிந்திக்காமல் பாவத்தில் சிக்கிக் கொண்டான். 
கட்டளைகளை அறியாமல் மீறுதல் கட்டளைகளைப் பற்றிய எவ்வித அக்கறையும் இல்லாத நிலையை குறித்து எடுத்துக்காட்டுகிறது. 
பரிசுத்தரின் கட்டளைக்கு கீழ்படியாமல் பரிசுத்தமான வாழ்வை தலைவனால் நடத்த முடியாது. 
கட்டளைகளை மீறுவதால் பரிசுத்தமே மீறப்படுகின்றது. 
எதை செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டதோ அந்த செயல்கள் செய்யப்படுகின்றன. 
தடைகளை விதித்தவனே தடையை மீறுகிறவனாக மாறிவிட்டான். 
செய்யத் தகாததை செய்து விட்டான். எனவே பாவத்திற்கு உட்பட்டான். 
அதாவது தலைவன் பாவி என்ற பெயரைப் பெற்று தலைவன் என்ற பெயரை இழந்தான். குற்றவாளி என்ற பெயரைக் கொண்டான். தேவகட்டளைகளை மீறினதினால் தேவனுக்கு முன்பாகவும் மக்கள் இடறி போக தக்கதாக தவறு செய்து விட்டதால் மனிதருக்கு முன்பாகவும் குற்றவாளி என்ற நிலைக்குள் அவன் வந்தான். 

தான் செய்தது பாவம் என்று தனக்கு தெரிய வரும் பொழுது என்று 23ம் வசனம் கூறுகிறது. 
வேறு எவரும் அவனது குற்றத்தை சுட்டிக் காட்டவே இல்லை. 
காரணம் தலைவனாகிய அவனை சாதாரண மக்கள் சபை விசுவாசிகள் நெருங்கி சேர முடியாத அளவிற்கு அவனுடைய அதிகாரம் பெரிதாக இருந்தது.
 சாலமோன் என்ற அரசன் தவறான பாதையில் சென்றான். 
ஞானத்தின் இருப்பிடமாக இருந்த அரசன் தூய்மையின் இருப்பிடமாக இருக்கவில்லை. தேவாலயம் கட்டினவன் தனது இருதயத்தை தேவனின் ஆலயமாக கொடுக்கவில்லை. அவன் அருகில் சென்று அவனைத் தட்டிக் கேட்க எவரும் இல்லை. 
எனவே கர்த்தரே அவனுக்கு தரிசனம் ஆகி அவனது பாவ நிலையினை இரண்டு முறை உணர்த்தினார் என்று 1 ராஜாக்கள் 1.9 பார்க்கிறோம்.
பிரபு செலுத்த வேண்டிய பலி லேவி 4.22-26 வரை வாசிப்போம்..

@authornej

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA