முதல் பிறப்பினால் சுதந்தரித்த (சு)பாவங்கள் மறு பிறப்பினால் சுதந்தரிக்கும் சுபாவங்கள்


முதல் பிறப்பினால் சுதந்தரித்த (சு)பாவங்கள் மறு பிறப்பினால் சுதந்தரிக்கும் சுபாவங்கள் 


            *பாவ இயல்

             *Hamartiology


 _THE INHERITED SIN NATURE_ 

 _முதல்

பிறப்பினால் சுதந்தரித்த பாவ சுபாவம்.._ 

@ மாம்சீக பிறப்பினால் நாம் பாவ சுபாவத்தை பெற்றுக்கொண்டோம். 

அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே, மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். 
எபேசியர் 2:3

 *@ மனிதனுடைய ஏழு முக்கிய குணங்கள் கறை படுத்த பட்டிருக்கிறது.* 
 
1. *அறிவாற்றல்* .. ( *intellect* )

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். 
2 கொரிந்தியர் 4:4

தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். 
ரோமர் 1:28

2. *மனசாட்சி.. ( conscience )

 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். 
1 தீமோத்தேயு 4:1

3. *விருப்பம் ( will )*

 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். 
ரோமர் 1:28

4. *இருதயம் ( heart )* 

அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து, 
எபேசியர் 4:18

5. *உணர்வு ( sense )* 

உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். 
எபேசியர் 4:19

6. *சுபாவம் ( nature )* 

 உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவஅன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
ரோமர் 1.31

7. *அனைத்தும் கறைபடுத்தப்பட்டது ( total depravity )*

ரோம 1.18-28

உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை, அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது, அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. 
ஏசாயா 1:6


 *கிறிஸ்துவின் சுவிசேஷம் மறு பிறப்பினால் மனிதனின் கறைபட்ட ஏழு குணங்களையும் மாற்றுகிறது..* 

1. *அறிவாற்றல் ( intellect )* 

என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, 
ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, 
அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், 
அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, *தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.* 
நீதிமொழிகள் 2.1-5

2. *மனசாட்சி ( conscience )* 

நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் *மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!* 
எபிரேயர் 9.14

3. *விருப்பம் ( will )*

 ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி *விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.* 
பிலிப்பியர் 2.13

4. *இருதயம் ( heart )* 

 துர்மனச்சாட்சி நீங்கத் *தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும்,* சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
எபிரேயர் 10.22

5. *உணர்வு ( sense )* 

ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு. சுவாசமே அவர்களை *உணர்வுள்ளவர்களாக்கும்* .
யோபு 32.8

6. *சுபாவம் ( nature )

இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, *திவ்விய சுபாவத்துக்குப்* பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 
2 பேதுரு 1:4

7. *அனைத்தும் கறைபடுத்தப்பட்டது ( total depravity )*

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, *எல்லாம் புதிதாயின.* 
2 கொரிந்தியர் 5:17

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA