உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகின்றது.. சுவிஷேச செய்தி இன்று உனக்கு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
வெகு அவசியமாகின்றது
மனுஷனுக்கு செம்மையாய் தோன்றுகிற வழியுண்டு: அதின் முடிவோ மரண வழிகள்.
நீதிமொழிகள் 16.25
வெகு சமீபமாய்த் தெரிகின்றது
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
வெகு அவசியமாகின்றது..
நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.
மத்தேயு 25.6
27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
எபிரேயர் 9:27
28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
எபிரேயர் 9:28
பல்லவி
ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்
ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்.
2. பாவத்தில் புரளுவதும்
மா சாபத்தில் முடியும் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
சங்கீதம் 96.13
5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
சங்கீதம் 51.3
3 என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
சங்கீதம் 51
56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
1 கொரிந்தியர் 15
15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
யாக்கோபு 1
4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
1 யோவான் 3
3. தேவனைத் தள்ளுபவர்
மா வேதனை அடைவார் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினவார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
யூதா 1.15
4. அன்பினால் வரும் அழைப்பு
நல்லதோர் எச்சரிப்பு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.
1 கொரிந்தியர் 16.22
5. தயவாக ஓடியே வா
கிருபையின் வாசல் உண்டு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
வெளிப்படுத்தின விசேஷம் 1.7
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301
Comments
Post a Comment