இயேசு கிறிஸ்துவைக்குறித்த சாட்சிகளும்.. நம்மைக்குறித்த ( பவுல் ) சாட்சிகளும்..சபைக்கு செய்தி
*இயேசு கிறிஸ்துவைக் குறித்த சாட்சிகளும்.. நம்மைக் குறித்த ( பவுல் ) சாட்சிகளும்..*
_ஒரு ஒப்புமை தியானம்_ ..
"சாட்சி " என்கிற வார்த்தை சட்ட பூர்வமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்..
சாட்சி vs வேதம்..
வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும், இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
ஏசாயா 8.20
_யோவான் சுவிசேஷத்தின் மேன்மை.._
_தியான கேள்வி.._
அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய், உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
யோவான் 8:13
_கிறிஸ்துவின் பதில்.._
என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.
யோவான் 5.31
1 _இயேசு கிறிஸ்துவைக் குறித்த சுய சாட்சி.._
. _நானே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறேன்_ ..
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது: ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன், நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.
யோவான் 8.14
_நம்முடைய சுய சாட்சி.._
நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்தஆவிக்குள் என்மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.
ரோமர் 9:2
2. _இயேசு கிறிஸ்துவைக் குறித்த பிறர் சாட்சி.._
_யோவான் ஸ்னானகன்.._
தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பெயர் யோவான். அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்
அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்
யோவான் 1:8
_நம்மைக்குறித்த பிறர் சாட்சி.._
விசுவாசிகளாகிய உங்களக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
1 தெசலோனிக்கேயர் 2:10
3. _இயேசு கிறிஸ்துவைக் குறித்த பிதாவின் சாட்சி_ ..
என்னை அனுப்பின பிதா தாமே எனனைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்:நீங்கள் ஒருக்காலும்அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
யோவான் 5:37
_நம்மைக்குறித்த பிதாவின் சாட்சி.._
நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை. அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.
2 கொரிந்தியர் 1:18
4. _இயேசுகிறிஸ்துவைக் குறித்த வேதவாக்கியங்கள் சாட்சி.._
வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
யோவான் 5:39
_நம்மைக்குறித்த நம் வார்த்தைகள் சாட்சி.._
வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.
2 கொரிந்தியர் 4:2
5. _இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஆவியானவர் சாட்சி_ ..
பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.
யோவான் 15:26
_நம்மைக்குறித்த ஆவியானவர் சாட்சி.._
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.
ரோமர் 8:16
6. _இயேசுகிறிஸ்துவைக் குறித்த சீஷர்கள் சாட்சி.._
நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
யோவான் 15:27
_நம்மைக்குறித்த அநேக சாட்சி.._
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய். அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.
1 தீமோத்தேயு 6:12
_கடைசியாக சகோதரரே.._
_பரலோகத்தில் என் சாட்சி.._
இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது. எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
யோபு 16.19
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301
https://chat.whatsapp.com/G7H65mRnXyq8iSbd89vcpj
Comments
Post a Comment