மேஜை நினைவு கூறுதல் ஆயத்த தியானம்.._யோசேப்பு - இயேசு கிறிஸ்துவின் நிழல்_
_யோசேப்பு - இயேசு கிறிஸ்துவின் நிழல்_ ..
_Joseph - a shadow of Jesus Christ.._
1. _Son..Most loved by the Father.._
_குமாரன்.. தகப்பனால் அதிகமாக நேசிக்கப்பட்டவர்_ ..
*யோசேப்பு* ..
இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
ஆதியாகமம் 37:3
*இயேசு கிறிஸ்து..*
நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.
நீதிமொழிகள் 8:30
2. _Son..Sent by the Father.._
_குமாரன்.. பிதாவினால் அனுப்பப்பட்டவர்_ ..
*யோசேப்பு*
அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான். அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.
ஆதியாகமம் 37:14
*இயேசு கிறிஸ்து*
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
யோவான் 3:17
3. _Son..voluntarily going_ ..
_குமாரன்.. தாமே இறங்கி வந்தார்_ ..
*யோசேப்பு*
அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்துக்கு அனுப்புகிறேன், வா என்றான்.
ஆதியாகமம் 37:13
*இயேசு கிறிஸ்து*
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
எபேசியர் 5.27
4. _Son.. searching his brothers._
_குமாரன்.. தன் சகோதரர்களை தேடுகிறவர்_ ..
*யோசேப்பு*
அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான். அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.
ஆதியாகமம் 37:17
*இயேசு கிறிஸ்து*
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
லூக்கா 19.10
5. _Son.. rejected by brothers.._
_குமாரன்.. தன் சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டார்_ .
*யோசேப்பு*
அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி,
ஆதியாகமம் 37:18
*இயேசு கிறிஸ்து*
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார், அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம், அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார், அவரை எண்ணாமற்போனோம்.
ஏசாயா 53:3
6. _Son.. sold by his brothers_ ..
_குமாரன். தன் சகோதரர்களால் விற்கப்பட்டவர்_ ..
*யோசேப்பு*
அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.
ஆதியாகமம் 37:28
*இயேசு கிறிஸ்து*
நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.
மத்தேயு 26.15
7. _Son.. Killed by his brothers.. (by mind_ )
_குமாரன்.. சகோதரர்களால் கொலை செய்யப்பட்டவர்.. ( மனதளவில் )_
*யோசேப்பு*
யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி, அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள். அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.
ஆதியாகமம் 37:23-24, 31-32.
*இயேசு கிறிஸ்து*
இஸ்ரவேலரே..
அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
அப்போஸ்தலர் 2.23
8. _Son.. raised by Father.._
_குமாரன்.. பிதாவினால் உயர்த்தப்பட்டார்_ ..
*யோசேப்பு*
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி,
பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து, தன்னுடைய இரண்டாம் இரத்தின்மேல் அவைன ஏற்றி, தொண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன். ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது என்றான்.
ஆதியாகமம் 41:41-44
*இயேசு கிறிஸ்து*
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
பிலிப்பியர் 2:9-11
*Worship thought..*
_Son.. worthy for worship.._
_குமாரன்.. ஆராதிக்கப்படுவதற்கு தகுதியானவர்_ ..
*யோசேப்பு*
தாங்கள் அங்கே போஜனம் செய்யப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டபடியால், மத்தியானத்தில் யோசேப்பு வருமளவும் காணிக்கையை ஆயத்தமாய் வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
ஆதியாகமம் 43:25
*இயேசு கிறிஸ்து..*
அந்தப் பிரசன்னமாகுதலைத் தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
1 தீமோத்தேயு 6:15-16
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment