*ஆடுகளும் மேய்ப்பனும்* .. சபைக்கு செய்தி



@ பழைய ஏற்பாட்டில் பாவ நிவிர்த்திக்காக ஆடுகள் பலியாக அர்ப்பணிக்கப்பட்டது..

@ புதிய ஏற்பாட்டில் பாவ நிவிர்த்திக்காக மேய்ப்பனே பலியானார்..


          *SHEEP & SHEPHERD* 

 *ஆடுகளும் மேய்ப்பனும்* 

=========================================

 *ஆடுகளின் பொதுவான தன்மைகள்..* 

1. *காணாமற்போன ஆடுகள்..* 

என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள், ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள், தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள். 
எரேமியா 50:6

2. *மேய்ப்பனில்லாத ஆடுகள்..* 

அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, 
மத்தேயு 9:36

3. *சிதறித்திரிகிற ஆடுகள்..* 

என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது, விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை. 
எசேக்கியேல் 34:6
=========================================

 *ஆடுகள் மீது மேய்ப்பனின் கரிசனை..* 

1. *பரலோகத்தில் இருந்து இறங்கி வந்த மேய்ப்பன்* .. 

அதற்கு அவர்: காணாமற்;போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல வென்றார். 
மத்தேயு 15:24

2. *தேடி திரிந்த மேய்ப்பன்..* 

உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப் போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? 
மத்தேயு 18:12

3. *ஆடுகளை அறிந்திருக்கும் மேய்ப்பன்..* 

என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. 
யோவான் 10:27

4. *மேய்க்கும் மேய்ப்பன்..* 

கர்த்தரே தேவனென்று அறியுங்கள், நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம். 
சங்கீதம் 100:3

=========================================

 *மேய்ப்பனின் தன்மைகள்..* 

1. *ஜீவன் கொடுக்கும் மேய்ப்பன்..* 

நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். 
யோவான் 10:11

2. *நித்திய உடன்படிக்கையின் மேய்ப்பன்.* . 

 நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், 
எபிரேயர் 13:20

3. *ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமான மேய்ப்பன்* .. 

சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள். இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள். 
1 பேதுரு 2:25

4. *மெதுவாய் நடத்தும் மேய்ப்பன்.*

மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். 
ஏசாயா 40:11

5. *என் மேய்ப்பன்..* 

 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். 
சங்கீதம் 23:1

6. *நியாயம் தீர்க்கும் மேய்ப்பன்..* 

அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, 
மத்தேயு 25:32

7. *வெளிப்படும் மேய்ப்பன்* .. 

அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். 
1 பேதுரு 5:4

=========================================

யோவான் 10 ம் அதிகாரத்தின் கதிர்கள் 
John chapter 10 gleanings..

Real Shepherd's morning scene:
1. He enters the gate
2. He recognises by name
3. Sheep also responds the shepherd 
4. He leads them out
5. Never follow stranger..

Real Shepherd's midday scene:
1. He pastures
2. He protects
3. He provides
4. He satisfies
5. He nourishes

Real Shepherd's night scene:
1. He gathers
2. He gives life
3. He understands
4. He watches
5. He guards

=========================================

 *இரட்சிப்பின் மூன்று காலங்களிலும் செயல்களிலும் மேய்ப்பனின் பங்கு* .

1. *Justification* ... 

 *நீதிமானாகுதல்* .. 

 *நல்ல மேய்ப்பன்..* 

நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். 
யோவான் 10:9

2. *Sanctification* .. 

 *பரிசுத்தமாகுதல்* .. 

 *பெரிய மேய்ப்பன்..* 

 நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், 
எபிரேயர் 13:20

3. *Glorification* .. 

 *மகிமைப்படுதல்* .. 

 *பிரதான மேய்ப்பர்..* 

அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். 
1 பேதுரு 5:4

=========================================

 *இரட்சிப்பின் பாதுகாப்பில் மேய்ப்பனின் பங்கு* .. 

இரட்டை அடுக்கு பாதுகாப்பு..

 நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. ( குமாரன் )

அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. ( பிதா )

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். 
யோவான் 10:30

courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919964050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA