மேஜை நினைவு கூறுதல் தியானம்.. பலிபீடத்து கொம்புகள்..
*பலிபீடத்தின் கொம்புகள்..*
கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார், பண்டிகைப்பலியைக் கொண்டுபோய்ப் *பலிபீடத்தின் கொம்புகளில்* கயிறுகளால் கட்டுங்கள்.
சங்கீதம் 118:27
1. _பாவங்கள் பலிபீடத்தின் கொம்புகளில் பதிந்திருக்கிறது_ ..
யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் *உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.*
எரேமியா 17:1
2. _கொம்புகளில் சிக்கிக்கொண்ட ஆடு நம் பாவபரிகாரத்திற்கு நிழல்.._
ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் *கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக்* கண்டான். அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.
ஆதியாகமம் 22:13
3. _பலிபீடத்தின் கொம்புகள் அடைக்கலத்திற்கு உருவகமாக விளங்குகிறது_ ..
அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததினால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்.
1 இராஜாக்கள் 1:50
இதோ, அதோனியா ராஜாவாகிய சாலொமோனுக்குப் பயப்படுகிறான் என்றும், இதோ, அவன் *பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு* , ராஜாவாகிய சாலொமோன் தமது அடியானைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று இன்று எனக்கு ஆணையிடுவாராக என்கிறான் என்றும், சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.
1 இராஜாக்கள் 1:51
4. _பலிபீடத்து கொம்புகளில் ரத்தம் தெளிக்கப்பட வேண்டும்_ ..
அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன் விரலினால் *பலிபீடத்தின் கொம்புகள்மேல் இட்டு* , மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
யாத்திராகமம் 29:12
5. _பலிபீடத்து கொம்புகளில் பிராயசித்தம் செய்ய வேண்டும்._ .
வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் *கொம்புகளின்மேல்* *பிராயச்சித்தம்பண்ணுவானாக* . உங்கள் தலைமுறைதோறும் வருஷத்தில் ஒருமுறை அதின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக. அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.
யாத்திராகமம் 30:10
6. _இரட்சணிய கொம்பு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிழல்_ ..
தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் *ரட்சணியக் கொம்பும்* , என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர். என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.
2 சாமுவேல் 22:3
7. _இரட்சணிய கொம்பு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிஜம்_
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் *கேடகமும்* , என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
சங்கீதம் 18:2
8. _பலிபீடத்து கொம்புகளில் பதிந்திருந்த கையெழுத்தை குலைத்தார்.._
நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து,
கொலோசெயர் 2:14
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார்.
கொலோசெயர் 2:15
*ஆராதனை சிந்தை..*
கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார், பண்டிகைப்பலியைக் கொண்டுபோய்ப் *பலிபீடத்தின் கொம்புகளில்* கயிறுகளால் கட்டுங்கள்.
சங்கீதம் 118:27
courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
whatsapp: +91 9965050301
Comments
Post a Comment