ஆலயத்தில் பணி தீர்ந்து கொண்டு வரப்பட்ட கற்கள்


பணி தீர்ந்து கொண்டு வரப்பட்ட கற்கள்.

தியான வசனம்..

ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது, ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை. 
1 இராஜாக்கள் 6:7

சபையின் அஸ்திபாரமாகிய கல்.. கிறிஸ்து

1. மனுஷரால் தள்ளப்பட்ட கல்..

2. தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட கல்

3. விலையேறப்பெற்ற கல்

4. ஜீவனுள்ள கல்

5. பிரதான மூலைக்கல்

6. பரீட்சிக்கப்பட்ட கல்

7. திட அஸ்திபரமுள்ள மூலைக்கல் 

மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும். 
1 பேதுரு 2:4

ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது. கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று. 
1 பேதுரு 2:7

ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன், அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். 
ஏசாயா 28:16

---------------------------------------------------------------------------------
சபையோடு இணைக்கப்பட்ட விசுவாசிகள் பணி தீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்கள்..

மூலைக்கல் ஒன்று
கற்கள் அநேகம்..

 அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். 
எபேசியர் 2:20

1. நாமும் தெரிந்து கொள்ளப்பட்ட கற்கள்..

பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. 
1 பேதுரு 1:2

2. நாமும் உருவாக்கப்பட்ட கற்கள்

இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண், நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.
ஏசாயா 64.8

3. நாமும் பூரணராக்கப்பட்ட கற்கள்

மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்
கொலோசெயர் 2:10

4. நாமும் இசைவாக இணைக்கப்பட்ட கற்கள்.

அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது. 
எபேசியர் 2:21

5. நாமும் மறைந்திருக்கும் கற்கள்..

 ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, 
கொலோசெயர் 2:6

6. நாமும் சகல கற்களையும் தாங்கும் கற்கள்..

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். 
கலாத்தியர் 6:2

7. நாமும் முத்திரை வெட்டாய் வெட்டப்பட்ட கற்கள்..

 இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்களுள்ளவைகளுமாயிருந்தது. பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம் ஒவ்வொன்றில் முத்திரை வெட்டாய் வெட்டியிருந்தது.
யாத்திராகமம் 39.14

--------------------------------------------------------

கீழ்ப்படியாத ( சபை அற்ற ) ஜனங்களுக்கு..

1. இடறுதற்கேதுவான கல்..

2. விழுதற்கேதுவான கன்மலை..

ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது. கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று.
1 பேதுரு 2.7

---------------------------------------------------------------------------------
பரலோகத்தில் தேவாலயமாகிய கிறிஸ்து..

சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். 

12 அஸ்திபாரக் கற்கள்..

 நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன, அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன. 
வெளிப்படுத்தினத விசேஷம் 21:14

அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது, நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது. 
வெளிப்படுத்தினத விசேஷம் 21:18

நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன, முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்
 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே. 
வெளிப்படுத்தினத விசேஷம் 21:19 - 20

 அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். 
வெளிப்படுத்தினத விசேஷம் 21:22

courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA