ஒரே நிகழ்வு....ஒருவர்க்கு இரட்சிப்பு .. மற்றவர்க்கு நியாயத்தீர்ப்பு* ..


வேதம் உலக மக்களையே இரண்டு பிரிவுகளாக மட்டுமே காண்கிறது..

சிலுவை மரணம் உலக மக்களையே இரண்டு பிரிவுகளாக மட்டுமே பிரிக்கிறது..

 *ஒரே நிகழ்வு..

 *ஒருவர்க்கு இரட்சிப்பு ..* 

 *மற்றவர்க்கு நியாயத்தீர்ப்பு* .. 

 *Single Event..* 

 *Salvation for one..* 

 *Judgement for another..* 

தியான வசனம் 

ஓன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார்.
யோபு 37.13

 _இஸ்ரவேலருக்கு_ .. 

1. *செங்கடல்* .. 

 _இஸ்ரவேலருக்கு தப்புவிக்க பாதை.._ 

மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் *சமுத்திரம்* ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார். ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. 
இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள். அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. 
யாத்திராகமம் 14:21-22

 _எகிப்தியர்க்கு அழிவின் பாதை.._ 

 அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே *சமுத்திரத்தின்* நடுவே பிரவேசித்தார்கள். 
அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான். விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்தது. எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப் போட்டார். 
யாத்திராகமம் 14:23, 27

2. *வானம்* .. 

 _இஸ்ரவேலருக்கு மன்னா..

மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, *வானத்தின்* தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். 
தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான், அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார். 
சங்கீதம் 78:24, 25

 _எமோரியர்க்கு கல்மழை.._ 

அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்கா மட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் *வானத்திலிருந்து* பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப்பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள். 
யோசுவா 10:11

3. *மேகஸ்தம்பம்* .. 

 _இஸ்ரவேலருக்கு வெளிச்சம்.._ 

அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த *மேக ஸ்தம்பமும்* விலகி, அவர்கள் பின்னே நின்றது. அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது. எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது. இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று. 
யாத்திராகமம் 14:19-20

 _எகிப்தியர்க்கு அந்தகாரம்._ . 

யாத் 14.19-20

4. *ஜலப்பிரளயம்* .. 

 _நோவாவின் குடும்பத்தார் காக்கப்பட்டார்கள்_ .. 

அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் *பேழையிலே* சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். 
1 பேதுரு 3:20

 _கீழ்ப்படியாதவர்களுக்கு அழிவு.._ 

மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும்பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு *நிக்கிரகமாயின* . நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. 
ஆதியாகமம் 7:23

5. *உடன்படிக்கை பெட்டி..* 

 _ஓபேத் ஏதோம் வீட்டாருக்கு ஆசிர்வாதம்_ .. 

 *பெட்டியைத்* தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே சேர்த்தான். 
தேவனுடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்
1 நாளாகமம் 13:13-14

 _பெலிஸ்தியர்க்கு கொள்ளை நோய்.._ 

பெலிஸ்தர் தேவனுடைய *பெட்டியைப்* பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து தாகோனண்டையிலே வைத்தார்கள். செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று. 
1 சாமுவேல் 5:12

-------------------------------------------

 _உலகம் அனைத்திற்கும்_ .. 

1. *_கிறிஸ்துவின் சிலுவை மரணம்_* .. 

 _ஒரு பக்கத்து கள்ளனுக்கு பரதீசு_ .. 

இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 
லூக்கா 23:43

 மறு பக்க கள்ளனுக்கு நரகம் 

அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். 
லூக்கா 23:39

2. *கிறிஸ்துவின் சிலுவை உபதேசம்* .. 

 _இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு தேவ பெலன்_ .. 

 சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 
1 கொரிந்தியர் 1:18

 _கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியம்_ .. 

1 கொரிந்தியர் 1:18


 *Closing thought..* 

 *கர்த்தருடைய வார்த்தை.*

 _கீழ்ப்படிகிறவர்களுக்கு தேவ அன்பு பூரணம்_ .. 

அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும். நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். 
1 யோவான் 2:5

 _கீழ்ப்படியாதவர்களுக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பு_ .

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
யோவான் 12.48

coutresy

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA