_தேவனுடைய பிள்ளைகள் விலக வேண்டிய " அந்நிய " காரியங்கள்
_தேவனுடைய பிள்ளைகள் விலக வேண்டிய " அந்நிய " காரியங்கள்
*PROFANE* ..
meaning,, தெய்வ நிந்தனை..
*Strange* ..
meaning,, விசித்திரமான..
===========================
1. *அந்நிய தூபம்..*
*Strange Incence..*
அதின்மேல் *அந்நிய தூபத்தையாகிலும்,* தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம். அதின் மேல் பானபலியை ஊற்றவும்வேண்டாம்.
யாத்திராகமம் 30.9
விளைவு: மரணம் ( பிரிதல்)
2. *அந்நிய தேவன்..*
*Other God..*
கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, ஆகையால், *அந்நிய தேவனை* நீ பணிந்துகொள்ளவேண்டாம்.
யாத்திராகமம் 34.14
கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், *அந்நிய தேவன்* அவரோடே இருந்ததில்லை.
உபாகமம் 32:12
விளைவு: தவறான வழி நடத்தல்
3. *அந்நிய அக்கினி..*
*Profane Fire..*
பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத *அந்நிய அக்கினியை* அருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
லேவியராகமம் 10.1
விளைவு: தேவ கோபம்
4. *அந்நிய நுகம்..*
*Unequal Yoke..*
*அந்நிய நுகத்திலே* அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
2 கொரிந்தியர் 6.14
விளைவு: ஐக்கியமின்மை
5. *அந்நிய தேசம்..*
*Strange Land..*
கர்த்தரின் பாட்டை *அந்நியதேசத்தில்* நாங்கள் பாடுவதெப்படி?
சங்கீதம் 137.4
விளைவு: தவறான குடியிருப்பு
6. *அந்நிய தேவர்கள்..*
*Strange Gods..*
அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற *அந்நியதேவர்களை* அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.
யோசுவா 24.23
விளைவு: தவறான ஆராதனை
7. *அந்நிய பெண்..*
*Strange Woman..*
இச்சகவார்த்தைகளைப் பேசும் *அந்நிய பெண்ணாகிய* பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
நீதிமொழிகள் 7.4
விளைவு: கண்ணிகள்
8. *அந்நிய காரியம்..*
*Strange Thing..*
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை *அந்நியகாரியமாக* எண்ணினார்கள்.
ஓசியா 8.12
ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, *அந்நிய காரியங்களில்* தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
1 பேதுரு 4.15
விளைவு: தேவனுடைய பிரியமின்மையை சம்பாதித்தல்.
9. *அந்நிய சத்தம்..*
*Strange Voice..*
*அந்நியருடைய சத்தத்தை* அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்
யோவான் 10.5
விளைவு: தேவ சப்தம் கேளாமை
10. *அந்நிய பாஷை..*
*Another Tongue..*
பரியாச உதடுகளினாலும் *அந்நியபாஷையினாலும்* இந்த ஜனத்தோடே பேசுவார்.
ஏசாயா 28.11
விளைவு: தவறான வேத புரிதல்
11. *அந்நிய மாம்சம்..*
*Strange Flesh..*
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, *அந்நிய மாம்சத்தைத்* தொடர்ந்து நித்திய ஆக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
யூதா 1.7
விளைவு: நித்திய ஆக்கினை
*Closing thought..*
*அந்நிய போதனைகள்..*
*Strange Doctrines..*
பலவிதமான *அந்நிய போதனைகளால்* அலைப்புண்டு திரியாதிருங்கள்.போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது. போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே.
எபிரேயர் 13.9
விளைவு: இருதயம் ஸ்திரமின்மை
courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment