*40 வருஷம் ..* *THE TIME OF 40 YEARS..* தேவன் எப்படி 2023 நடத்தினார் ..



               *40 வருஷம் ..* 

        *THE TIME OF 40 YEARS..* 


 _இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் 40 வருடங்கள் ஆவிக்குரிய இஸ்ரவேல் விசுவாசிகளுக்கு இந்த உலக வாழ்க்கையிலிருந்து நித்தியம் வரை என்கிற முழுமையான ஆண்டை நிழலாக காட்டுகிறது.._ 

40 என்பது வேதத்தில் முக்கியமான சத்தியங்களை வுணர்த்தும் ஒரு காலம் ஆகும்..

மோசேயின் முதல் 40 ஆண்டுகள் நான் என்ன முடியும் என்ற வாழ்க்கை?

மோசேயின் அடுத்த 40 ஆண்டுகள் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்ற வாழ்க்கை?

மோசேயின் கடைசி 40 ஆண்டுகள் தேவன் தன்னைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்ற வாழ்க்கை?

மோசே மரிக்கிறபோது நூற்றிருபது 40+40+40 வயதாயிருந்தான், அவன் கண்கள் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை. 
உபாகமம் 34:7

Moses leadership..
Godly leadership is the Right Man at the Right Time depending upon Right Resources who accomplished Right Ends..

தேவன் சார்ந்த தலைமைத்துவம் 
ஏற்புடைய மனிதன்
ஏற்புடைய நேரத்தில்
ஏற்புடைய வளங்களால்
ஏற்புடைய முடிவை
நிகழ்த்துபவர் ...

A Godly leader should be empowered by God's spirit
A Godly leader should be encouraged by God's people
A Godly leader should be equipped by God's wisdom..

தேவன் சார்ந்த தலைமைத்துவம் 
தேவ ஆவியால் பெலப்படுத்தப்படுதல்
தேவ ஜனங்களால் ஊக்கமூட்டப்படுதல்
தேவ ஞானத்தால் முன்னேற்படுதல்


                 *40 வருடமும்..* 

                         *40 years..* 

1. _கர்த்தர் ஆதரிக்கிறார்_ .. 

 *நாற்பது வருஷகாலமாய்* வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து, 
கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்திரமாகப் பங்கிட்டுக்கொடுத்து, 
அப்போஸ்தலர் 13:19

 And about the time of *forty years* suffered He their manners in the wilderness. 
Acts 13:18

 *God's provision..* 
 _தேவனுடைய வளங்கள்.._ 


2. _கர்த்தர் கிரியைகள் செய்கிறார்_ .. 

அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, *நாற்பது வருஷகாலமாய்* என் கிரியைகளைக் கண்டார்கள். 
எபிரேயர் 3:9

When your fathers tempted me, proved me, and saw my works *forty years.* 
Hebrews 3:9

 *God's works..* 
 _தேவனுடைய கிரியைகள்.._ 


3. _கர்த்தர் வழிநடத்துகிறார்_ .. 

நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு உங்களை நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, உங்களை *நாற்பது வருஷமாக* வனாந்தரத்திலே வழிநடத்தி, 
ஆமோஸ் 2:10

Also I brought you up from the land of Egypt, and led you *forty years* through the wilderness, to possess the land of the Amorite. 
Amos 2:10

 *God's leading..* 
 _தேவனுடைய நடத்துதல்.._ 


4. _கர்த்தர் பராமரிக்கிறார்.._ 

இப்படி *நாற்பது வருஷகாலமாக* வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்துவந்தீர். அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப்போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை. 
நெகேமியா 9:21

Yea, *forty years* didst thou sustain them in the wilderness, so that they lacked nothing; their clothes waxed not old, and their feet swelled not. 
Nehemiah 9:21

 *God's maintenance..* 
 _தேவனுடைய பராமரிப்பு..


5 _. கர்த்தர் சேதமின்றி வழி நடத்துகிறார்._ . 

கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் *நாற்பது வருஷம்* உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன், உங்கள்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை. 
உபாகமம் 29:5

 And I have led you *forty years* in the wilderness: your clothes are not waxen old upon you, and thy shoe is not waxen old upon thy foot. 
Deuteronomy 29:5

 *God's secured leading..* 
 _தேவனுடைய பாதுகாப்பு.._ 


6. _கர்த்தர் இருதயத்தை அறிகிறார்_ .. 

உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த *நாற்பது வருஷமளவும்* வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. 
உபாகமம் 8:2

 And thou shalt remember all the way which the LORD thy God led thee these *forty years* in the wilderness, to humble thee, and to prove thee, to know what was in thine heart, whether thou wouldest keep his commandments, or no. 
Deuteronomy 8:2

 *God's knowing..* 
 _தேவனுடைய அறிதல்.._ 


7. _கர்த்தர் பாதுகாக்கிறார்_ .. 

இந்த *நாற்பது வருஷமும்* உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாய் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை. 
உபாகமம் 8:4

Thy raiment waxed not old upon thee, neither did thy foot swell, these *forty years.* 
Deuteronomy 8:4

 *God's comfort..* 
 _தேவனுடைய ஆறுதல்.._ 


8. _கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்_ .. 

உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார், இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்,; இந்த *நாற்பது வருஷமும்* உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார், உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார். 
உபாகமம் 2:7

 For the LORD thy God hath blessed thee in all the works of thy hand: He knoweth thy walking through this great wilderness: these *forty years* the LORD thy God hath been with thee; thou hast lacked nothing. 
Deuteronomy 2:7

 *God's blessings..* 
 _தேவனுடைய ஆசிர்வாதம்.._ 


9. _கர்த்தர் மன்னா அருளுகிறார்_ .. 

இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் *நாற்பது வருஷமளவும்* மன்னாவைப் புசித்தார்கள். அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள். 
யாத்திராகமம் 16:35

 And the children of Israel did eat manna *forty years,* until they came to a land inhabited; they did eat manna, until they came unto the borders of the land of Canaan. 
Exodus 16:35

 *God's word..* 
 _தேவனுடைய வார்த்தை.._ 


 *Closing thought..* 

 _நம்மை ஆராய்ந்து பார்ப்போம்_ .. 

 _நம்முடைய பெலவீனங்கள்_ .. 

நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் *நாற்பது வருஷம்* உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள். 
எண்ணாகமம் 14:34

After the number of the days in which ye searched the land, even *forty days,* each day for a year, shall ye bear your iniquities, even forty years, and ye shall know my breach of promise. 
Numbers 14:34

 *Our weakness..* 
 _நம்முடைய பெலவீனங்கள்.._ 


     *2023 வருட இறுதியில் சிந்திப்போம்* .. 

தேவனுடைய வேதனை நம் மேல்..

மேலும், அவர் *நாற்பது வருஷமாய்* யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே.
எபிரேயர் 3.17

 But with whom was *He grieved forty years?* was it not with them that had sinned, whose carcases fell in the wilderness? 
Hebrews 3:17

      *God's grief..* 
 _தேவனுடைய வேதனை.._ 


கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 ம் தெரு தூத்துக்குடி 628 003
meetshalomsteward@gmail.com
Whatsapp:+919965050301



Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA