*2023 பழையவைகளை கையாளுதல்.* . 2024 புதியவைகளை செயல்படுத்துதல்* new year message



 *2023 END THOUGHT* 

 *2024 NEW THOUGHT* 


 *2023 பழையவைகளை கையாளுதல்.* . 

 *2024 DEALING WITH THE OLD* 


1. _பழைய தானியம்.._ 

 *Old store..* 

போன வருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள்.
லேவியராகமம் 26.10

2. _பழைய பகை.._ 

 *Perpetual hatred..* 

 நீ பழைய ( தொடர்கிற ) பகையை வைத்து, இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,
எசேக்கியேல் 35.5

3. _பழைய வஸ்திரம்.._ 

 *Old garment..* 

ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்ததுண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.
மத்தேயு 9.16

4. _பழைய மனுஷன்.._ 

 *Old man..* 

நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 6.6

5. _பழைய புளித்த மா.._ 

 *Old leaven..* 

ஆகையால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
1 கொரிந்தியர் 5.8

6. _பழைய கிரியைகள்.._ 

 *Old things..* 

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
2 கொரிந்தியர் 5.17

7. _பழைய பாம்பு.._ 

 *Old serpent..* 

 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது, அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 12.9


 *Dealing with the new..* 

 *புதியவைகளை செயல்படுத்துதல்*

1. *புதிய எஜமான்..* 

 _New master.._ 

ரோமர் 6

இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். 
ரோமர் 6:22

2. *புதிய புருஷன்..* 

 _New husband.._ 

ரோமர் 7

அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். 
ரோமர் 7:4

3. *புதிய தகப்பன்..* 

 _New father.._ 

ரோமர் 8

தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? 
ரோமர் 8:32

4. *புதிய மனுஷன்..* 

 _New man.._ 

ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை. எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. 
2 கொரிந்தியர் 4:16

5. *புதிய ஆவி..* 

 _New spirit.._ 

 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, 
மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். 
எபேசியர் 4:23-24

6. *புதிய மனம்..* 

 _New mind.._ 

 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். 
ரோமர் 12:2

7. *புதிய வானம்..* 
 *புதிய பூமி..* 

 _New heaven..new earth.._ 

 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன், முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின, சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. 
வெளிப்படுத்தின விசேஷம் 21:1

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
meetshalomsteward@gmail.com
Whatsapp:+919965050301

https://chat.whatsapp.com/ISfghi0WK2V7Vh4f1N7yl8

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA