தெய்வீக குயவன்


தெய்வீக குயவன்..

 *_மகிமையான பாத்திரம்.* . 
 *தெய்வீக குயவன்_ ..* 

                *_Glorious vessel..* 
                     *Divine potter_ ..* 

========================

வருடத்தின் கடைசி நாட்களில் 
நம்மை நாமே.... 

@ சிந்திக்கிறேன்...
@சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்...
@ ஆவி ஆராய்ச்சிசெய்தது..

 பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன். 
சங்கீதம் 77:5

இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன், என் ஆவி ஆராய்ச்சிசெய்தது. 
சங்கீதம் 77:6

========================

 _தியான வசனம்.._ 

 கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: 
 நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ, அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். 
 அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன், இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான்.  குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று, அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான். 
எரேமியா 18:4

========================

குயவனுக்கும் மண்பாண்டத்திற்கும் உள்ள உறவு.. 

 _மகிமையான பாத்திரம்.._ 

 _உருவாக்கப்பட்டதன் நோக்கம்_ .. 

1. *To proclaim His glory..* 

 _மண்பாண்டம் தம்முடைய மகிமையின் ஐஸ்வரியத்தை தெரியப்படுத்த வேண்டும்_ .. 

 தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? 
ரோமர் 9:23

2. *To hold Jesus..* 

 _மண்பாண்டம் இயேசு கிறிஸ்துவை தன்னகத்தே வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்_ . . 

இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 
2 கொரிந்தியர் 4:7

3. *To be filled with Holy Spirit..* 

 _மண்பாண்டம் ஆவியினால் நிறைந்திருப்பது அவசியம்.._ 

உங்களில் அவனவன் தன்தன்  சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும். முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.  தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். 
ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்தஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்
1 தெசலோனிக்கேயர் 4:5-8

4. *To be used..* 

 _மண்பாண்டம் பயனுள்ளதாக இருக்க வேண்டியது அவசியம்_ .. 

ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு. அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான். 
2 தீமோத்தேயு 2:21

5. *To be transparent..* 

 _மண்பாண்டம் வெளியரங்கமாக இருக்க வேண்டியது அவசியம்_ .. 

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். 
2 கொரிந்தியர் 3:18

இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை. வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம். 
2 கொரிந்தியர் 4:1-2

 *Closing thought...* 

 _மண்குகை.. நாம்.._ 

கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது. 
சங்கீதம் 12:6

 இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண், நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. 
ஏசாயா 64:8

நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார், நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். 
சங்கீதம் 103:14

shalomsteward1@gmail.com
Whatsapp:+91 996505301


Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA