நீ ஏன் இதை செய்தாய்?

 


கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் இந்த நாளை.


 *நீ ஏன் இதைச் செய்தாய்?* 


 _7 கேள்விகள் யோனாவிடம் கேட்கப்படுகிறது.._ 

அப்பொழுது மாலுமி அவனிடத்தில்வந்து: 

 _1. நீ நித்திரைபண்ணுகிறது என்ன?_ 

யோனா 1:6

 அப்பொழுது அவர்கள் அவனை ( யோனா ) நோக்கி: _2. யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்._ 

 _3. உன் தொழில் என்ன?_ 

 _4. நீ எங்கேயிருந்து வருகிறாய்?_ 

 _5. உன் தேசம் எது?_ 

6. _நீ என்ன ஜாதியான்_ 

என்று கேட்டார்கள். 

யோனா 1:8

அதற்கு அவன்: நான் எபிரெயன். சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான். 

யோனா 1:9

 அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி:

7. *நீ ஏன் இதைச் செய்தாய்?* என்றார்கள். 

யோனா 1:10

பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்த படியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி *நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும்* என்று கேட்டார்கள். 

யோனா 1:11

 அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்து சமுத்திரத்தில் போட்டு விடுங்கள். அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும். *என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன்* என்றான். 

யோனா 1:12

@ கர்த்தருடைய சமூகத்திலிருந்து விலகி ஓடுகிற ஒரு மனுஷனை பார்த்து அவிசுவாசிகள் ஐயோ இவனுக்கு என்ன நேரிடுமோ என்று பயப்படும் நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

@ ஆனால் விலகி ஓடுகிற விசுவாசிக்கோ எந்த கவலையும் இல்ல. உணர்வும் இல்லை. 

காரணம் அநேகம் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். 

@ தேவனுடைய சமூகம், ஆலோசனை, வழிநடத்துதல் இவனிடம் மௌனமாயிருக்கிறது. 

@ விசுவாசிகள் தங்களுடைய தவறை மனதில் சிந்தியாமல் நிம்மதியாக தூங்குகிறார்கள்


 *நீ ஏன் இதை செய்தாய்* என்ற கேள்வி அவிசுவாசிகள் கேட்கும் போது விசுவாசிகள் வெட்கி தலை குனிகிற சம்பவங்கள் அதிகம் கேள்விப்படுகிறோம். 

@ கர்த்தருடைய சமூகத்தை விட்டு விலகுகிறவனை போல் துர்பாக்கியசாலிகள் யாரும் இல்லை எனலாம். 

@ கர்த்தருடைய சமூகம் எங்களோடு வரவில்லை என்றால் நாங்கள் பிரயாணப்பட மாட்டோம் என்று மோசே கூறுகிறார். 


 உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும். இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான். 

யாத்திராகமம் 33:13


அதற்கு அவர்: *என் சமுகம்* உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு *இளைப்பாறுதல்* தருவேன் என்றார். 

யாத்திராகமம் 33:14

அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடே கூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும். 

யாத்திராகமம் 33:15


நாம் பாவம் செய்யாதபடிக்கு தம்மை பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்கும் தானே கர்த்தருடைய சமூகம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வெளிப்பட் டது. 

@+கர்த்தருடைய சமூகத்தை போல அனந்தமானது இந்த உலகத்தில் எது? 

@ ஆயிரம் நாளை பார்க்கிலும் விசேஷித்தது அல்லவா. 

@ பரிபூரண ஆனந்தம் உண்டே. 

@ தாவீது வேதனையோடு ஜெபித்த காரியத்தில் பிரதானமானது எது தெரியுமா.? 

@ உமது சமுகத்தை விட்டு என்னை தள்ளாமலும் தானே? 

@ கர்த்தரே தமது சமூகத்தை விட்டு தள்ளினால் நாம் எங்க போவோம். யோசித்தோமா?


@ தாவீது, யோனா, காயீன் இவர்கள் எல்லாரும் தங்கள் தோல்விகளுக்கு கர்த்தருடைய சமூகத்தை விட்டு விலகுகிறதையே குறிப்பிடுகிறார்கள். 

@ நாம் கர்த்தருடைய சமூகத்தை விட்டு ஓடுகிறதினால் நமக்கு மட்டும் அல்ல. நம்முடைய குடும்பம், நம்முடைய சபை, நம்முடைய சமுதாயம் குழப்பத்திற்குள்ளாகிறதே. 

 *நீ ஏன் இதை செய்தாய்* என்கிற கேள்வி வெட்கமாயிருக்கிறதா? 

நான் தான் காரணம். 

@ இந்த பெரிய கொந்தளித்துக்கொண்டிருக்கும் குழப்பத்திற்கு நான் தான் காரணமாக வேண்டும்.


 _அவருடைய சமூகத்தின் மேன்மையை இந்த நாளின் காலை வேளையில் அறிந்து கொள்வோம்_ . 


 ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், *உம்முடைய சமுகத்தில்* பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு.

சங்கீதம் 16.11


மகிமையும் கனமும் அவர் *சமுகத்தில் இருக்கிறது,* வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.

சங்கீதம் 96.6


தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன், அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது, மனுஷர் *தமது சமுகத்தில்* பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.

பிரசங்கி 3.14


கர்த்தரையும் அவர் நீ ஏன் இதை செய்தாய்? வல்லமையையும் நாடுங்கள், *அவர் சமுகத்தை நித்தமும்* தேடுங்கள்.

சங்கீதம் 105.4


உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? *உம்முடைய சமுகத்தைவிட்டு* எங்கே ஓடுவேன்?

சங்கீதம் 139.7


நம்மை தாழ்த்தி பகிரங்கமாக அறிக்கை செய்வோம். 

 _சமுத்திரம் தன் மும்முரத்தை விட்டு அமர்ந்தது.._ 


கிறிஸ்தவ விசுவாசிகள் சபை

டூவிபுரம் தூத்துக்குடி 628 003

shalomsteward1@gmail.com

Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA