✨✨✨✨✨✨சர்வவல்லவர் நியமித்த நாட்கள்..DAYS SET BY ALMIGHTY✨✨✨✨✨✨✨
SHALOM STEWARD BIBLICAL REVELATION
✨✨✨✨✨✨
சர்வவல்லவர் நியமித்த நாட்கள்..
DAYS SET BY ALMIGHTY
✨✨✨✨✨✨✨
🍅தியான வசனம்..
🍒சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?
யோபு 24:1
✨✨✨✨✨✨✨
✨ஆண்டவருடைய பரிசுத்தமான நாமம் இன்றும் என்றும் மகிமைப்படுவதாக. சகோதர சபையின் பரிசுத்தவான்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் கர்த்தருடைய ஆராதனையின் போது ஸ்தோத்திரம் செய்யும் போது அநேகர் அந்த நாளை ஓய்வு நாள் என்றும் அந்த நாளை கர்த்தருடைய நாள் என்றும் கூறுகிறதை நீங்கள் கவனித்திருக்கலாம். அது தவறு என்று சொல்வதை விட அவர்கள் அறியாமல் சில காரியங்களை செய்கிறார்கள் என்று தான் நாம் சொல்ல முடியும்.
யோவான் நான்காம் அதிகாரத்தில் நாங்கள் அறிந்திருக்கிறதை தொழுது கொள்கிறோம். கர்த்தரை அறிந்து கொண்டு தொழுகை செய்வதுதான் சரியான ஆராதனையாகும் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
அப்படி என்றால் அவருடைய செயல்கள் அவருடைய கிருபை, அவருடைய கல்வாரி சிலுவையில் அவர் நிறைவேற்றி முடித்த காரியங்கள், அவருடைய நாட்கள் அவருடைய சகல கிரியைகளையும் நாம் அறிந்து கர்த்தரை நாம் தொழுது கொள்வது சாலச் சிறந்தது. இன்றைக்கு சர்வ வல்லவர் நியமித்த நாட்கள் என்ன என்பதை நாம் சிந்திப்போம்.
✨ வேதத்தின்படி நாம் கூற வேண்டுமானால் நாம் சபையாக கூடி ஆராதனை ஏறெடுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை வாரத்தின் முதல் நாள் காலை என்றுதான் நாம் கூற முடியும்.
சில நாட்களின் விசேஷத்தை கவனியுங்கள்..
✨✨✨✨✨✨✨✨
♥️1. பரிசுத்த நாள்..
( இது வாரத்தின் முதல் மற்றும் எட்டாம் நாள் )
இது சபை கூடும் பரிசுத்த நாள்...
🍅இதுவே புதிய ஏற்பாட்டில் வாரத்தின் முதலாம் நாள் ஆகும்..
🍒அந்த நாள் உங்களுக்குச் சபை கூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும், அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது, இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை. லேவியராகமம் 23.21
🍒முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்த நாள்,; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. லேவியராகமம் 23.31
🍒ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள், எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள், அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள், அது ஆசரிக்கப்படும் நாள், அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம். லேவியராகமம் 23.36
✨✨✨✨✨✨✨
♥️2. ஓய்வு நாள்..
( இது வாரத்தின் ஏழாம் நாள் ஆகும் )
🍅( இது தேவன் தம்முடைய சிருஸ்டிப்பின் கிரியைகள் முடித்து ஓய்ந்திருந்த நாள் ஆகும்)
🍒ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள், அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம், நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்,; உபாகமம் 5. 15
🍒இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.
தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்தார்.
ஆதியாகமம் 2:2
🍒தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
ஆதியாகமம் 2:3
The Sabbath is a day of rest and worship observed on the seventh day of the week. It is observed in Judaism, Christianity, and other faiths.
Judaism
The Sabbath is observed on Saturday
It begins in the evening of what is Friday on the civil calendar
It commemorates the creation of the world and the Exodus from Egypt
The word "Shabbat" comes from the Hebrew word shavat, which means "to rest"
✨✨✨✨✨✨✨
♥️3. வாரத்தின் முதல்நாள்
( இது கர்த்தர் மரணத்தை விட்டு நீங்கி உயிர்த்தெழுந்த நாள் ஆகும்)
🍒 நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்தில் சேர்த்துவைக்கக்கடவன். 1 கொரிந்தியர் 16.2
🍒 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.
மத்தேயு 28:1
🍒 வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து.
மாற்கு 16:2
🍒 வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.
மாற்கு 16:9
🍒 வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
லூக்கா 24:1
🍒 வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள்.
யோவான் 20:1
🍒 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
யோவான் 20:19
🍒 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
அப்போஸ்தலர் 20:7
✨✨✨✨✨✨✨
♥️4. இயேசுகிறிஸ்துவின் நாள்..
( இது மத்திய ஆகாயத்தில் கர்த்தருடைய வருகையும் சபை எடுத்துக்கொள்ளப்படுகிற நாள் ஆகும்)
🍒 உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, பிலிப்பியர் 1.5
🍒மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்,
தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்பரவானவர்களும் இடறலற்றவர்களாயிருக்கவும் வேண்டுதல்செய்கிறேன்.
பிலிப்பியர் 1:9-11
🍒 ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். 2 தெசலோனிக்கேயர் 2. 2
Believers' Judgment:
Believers will be judged for their works, but not for salvation, as their sins are forgiven through Christ.
Rewards for Believers:
Believers will be rewarded for their faithfulness and good works, with those done for Christ's glory enduring as rewards.
✨✨✨✨✨✨✨
♥️5. கர்த்தருடைய நாள்..
( இது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு மற்றும் கிறிஸ்துவின் பூமிக்குரிய வருகை நடைபெறும் நாள் ஆகும் )
🍒 ஐயோ! அந்த நாள் பெரியது: அதைப்போலொத்த நாளில்லை, அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம், ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான். எரேமியா 30. 7
🍒கர்த்தர் தமது சேனைக்கு முன் சத்தமிடுவார், அவருடைய பாளயம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது, கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்? யோவேல் 2.11
🍒கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
யோவேல் 2.31
🍒நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள், நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது. யோவேல் 3.14
🍒 கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும். ஆமோஸ் 5.18
🍒 கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ ? ஆமோஸ் 5.20
🍒எல்லாஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடையநாள் சமீபமாய் வந்திருக்கிறது. நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும். உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.
ஒபதியா 1.15
🍒கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது. அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது. கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். செப்பனியா 1.14
🍒 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். மல்கியா 4.5
🍅புதிய ஏற்பாட்டில்..
🍒 இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். 1 தெசலோனிக்கேயர் 5. 2
🍒 சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே. 1 தெசலோனிக்கேயர் 5.2
🍒எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. 2 தெசலோனிக்கேயர் 2.3
🍒 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். 2 பேதுரு 3.10
இதுவே தேவனுடைய நாள் என்றும்...கோபாக்கினையின் மகா நாள் என்றும் குறிப்பிடப்படுகிறது..
🍒தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள். அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். 2 பேதுரு 3.12
🍒அவருடைய கோபாக்கினையின் மகா நாள்
வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள வெளிப்படுத்தினத விசேஷம் 6. 17
In Christian eschatology, the "Day of the Lord" and "Great White Throne Judgment" refer to the final judgment of all humanity, where the dead are resurrected and judged by God based on their deeds, with the wicked cast into the lake of fire.
Here's a more detailed explanation:
"Day of the Lord":
This phrase, found throughout the Old and New Testaments, generally refers to a time of God's intervention and judgment, often associated with the end times.
Great White Throne Judgment:
This is the final judgment described in Revelation 20:11-15, where all the dead, both small and great, stand before God.
Resurrection and Judgment:
The dead, including those who died during the millennium, will be resurrected and judged according to their deeds.
Books of Deeds:
Books are opened, containing records of everyone's actions, and another book, the "Book of Life," determines who will be saved or condemned.
Fate of the Unsaved:
Those not found in the Book of Life, along with death, Hades, the beast, the false prophet, and the devil, will be cast into the lake of fire.
Time of Judgment:
The Great White Throne Judgment occurs after the millennium, after Satan is cast into the lake of fire.
Jesus as Judge:
Jesus Christ will be the judge at the final judgment.
✨✨✨✨✨✨✨
♥️சிந்தனை..
வாரத்தின் முதல் நாளில் ஆராதனை சமயத்தில் பரிசுத்த நாள் என்று குறிப்பிடலாம்..
ஓய்வு நாள், கிறிஸ்துவின் நாள், கர்த்தருடைய நாள் என்பதை தவிர்க்கலாம்..
வேத ஆராய்ச்சியின் போதும் கிறிஸ்துவின் நாள், கர்த்தருடைய நாள் இரண்டிற்கும் தம்மில் உள்ள கால வித்தியாசம் சுமார் 0+1000 + 3.5 + 3.5 = 1007 வருடங்கள் இருப்பதை சுட்டி காட்டுவது மிக நல்லது..
God Bless the reader and the Scribe
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628003
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment