கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை..ஆரோக்கியமான கவலை கண்ணீர்..HEAlTHY TEARS
கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை..
ஆரோக்கியமான கவலை கண்ணீர்..
HEAlTHY TEARS
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*உங்களுக்காக கவலைப்படாதிருங்கள்..*
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
பிலிப்பியர் 4. 6
ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன். என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன். என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
அப்போஸ்தலர் 20.24
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
மத்தேயு 6.25-34
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ஆரோக்கியமான கவலை அவசியம்!!!
ஆத்துமக்களுக்காக, உங்கள் இனத்தாருக்காக, உங்கள் குடும்பத்தாருக்காக, உங்களோடு வேலை செய்யும் நண்பர்களுக்காக, இன்னும் அழிந்து போகும் ஒவ்வொரு ஜனங்களுக்காக கவலை!!!
அப் பவுல் :
எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது, நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்தஆவிக்குள் என்மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.
மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே.
ரோமர் 9:1-3
தாவீது :
உம்முடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
சங்கீதம் 119. 6
உமது வசனத்தைக் காத்துக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.
சங்கீதம் 119:158
எஸ்றா:
எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாகத் தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேலில் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று. ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.
எஸ்றா 10.1
சிந்திக்க :
நம்முடைய சிறு பிள்ளைகளுக்காக இப்பொழுது கண்ணீர் சிந்தினால் பின்பு கண்ணீர் சிந்த அவசியம் இருக்காது..
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Comments
Post a Comment