சந்தியா வேளை ... தேவன் உங்களை சந்திக்கிறாரா* ?* *DOES GOD VISIT YOU?*
**தேவன் உங்களை*
*சந்திக்கிறாரா* ?*
*DOES GOD VISIT YOU?*
=============================
*சந்தியா* என்பது தேவன் நம்மை சந்திக்கும் நிகழ்ச்சி..
*சந்தியா* நிகழ்ச்சிக்கு ஒரு முகாந்திரம் உண்டு..
*சந்தியா* நிகழ்ச்சிக்கு ஒரு இடம் வேண்டும்..
*சந்தியா* நிகழ்ச்சிக்கு ஒரு நேரம் முக்கியம்..
பொதுவாக பகல் வேளையும் இரவு வேளையும் சந்திக்கும் நேரம் *சந்தியா* ஆகும்..
இரவு வேளை முடிந்து அதிகாலை வேளை ஆரம்பமாகும் அந்த அழகான காலைப்பொழுது *சந்தியா* வுக்கு உகந்ததாகும்..
தேவன் சந்திக்கும் நேரம் நியாயத்தீர்ப்பு நேரமாக இருக்கலாம்...
Visitation means judgment. (1) When the people had sinned against God by making a golden calf and calling it God, Moses was told: "But now go, lead the people to the place of which I have spoken to you. Nevertheless, in the day when I visit, I will visit their sin upon them!
இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ. என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார். ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் Visit அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் visit என்றார்.
யாத்திராகமம் 32:34
1. *தேவன் உங்களை சந்திக்கும் முகாந்திரம்..*
_நம் உபத்திரவங்கள்.._
ஜனங்கள் விசுவாசித்தார்கள். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் *சந்தித்தார்* என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள்.
யாத்திராகமம் 4:31
2. *தேவன் உங்களை சந்திக்கும் சூழ்நிலை..*
_எகிப்தின் அடிமைத்தனம்.._
மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் *சந்திப்பார்* , அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்.
யாத்திராகமம் 13:19
3. *தேவன் உங்களை சந்திக்கும் இடம்..*
_ஆசாரிப்புகூடார வாசல்.._
உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் *சந்திக்கும்* இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.
யாத்திராகமம் 29:42
அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் *சந்திப்பேன்* . அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.
யாத்திராகமம் 29:43
யாத் 30.6, 30.36
4. *தேவன் உங்களை சந்திக்கும் ஸ்தானம்..*
_சாட்சி பெட்டி.._
அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் *சந்திக்கும்* ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய்.
எண்ணாகமம் 17:4
5. *தேவன் உங்களை சந்தoக்கும் மன்னா..*
_கர்த்தருடைய வார்த்தை.._
கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் *சந்தித்து* , அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடுகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,
ரூத் 1:6
*நாம் தேவனை சந்திக்க தவறுகிறோம்..*
நான் அவரை எங்கே கண்டு *சந்திக்கலாம்* என்பதை அறிந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து,
யோபு 23:3
*தேவன் சந்திக்க வரும்போது நாம் எங்கே இருக்கிறோம்?*
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
ஆதியாகமம் 3:8
*தேவன் எவ்வாறு இந்த பூமியில் நம்மை சந்தித்தார்?*
@ தேவன் நம்மை சந்தித்த நிகழ்வு கிறிஸ்துவின் பூலோக விஜயம்..
மாம்சத்தில் வெளிப்பட்டார்..
அது இரகசியம்..
1. *தம்முடைய கிருபையால்* ( *இயேசு கிறிஸ்து )*
என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் *சந்திப்பார்* , தேவன் என் சத்துருக்களுக்குவரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
சங்கீதம் 59:10
2. *கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவே..*
கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று *சந்திக்கும்* , நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
சங்கீதம் 85:10
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் *கண்டோம்* ( *சந்தித்தோம்* ),
அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
யோவான் 1:14
3. *நம்மை மீட்டுக்கொள்ள நம்மை சந்தித்தார்* ..
தமது ஜனத்தைச் *சந்தித்து* மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு,
லூக்கா 1:74
4. *அருணோதயம் இயேசு கிறிஸ்து..*
நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய *அருணோதயம்* நம்மைச் *சந்தித்திருக்கிறது* என்றான்.
லூக்கா 1:79
5. *தேவன் தங்களை சந்தித்ததை நினைவு கூர்ந்தார்கள்..*
கிட்டவந்து, பாடையைத் தொட்டார், அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள், அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் *சந்தித்தார்* என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
லூக்கா 7:16
*தேவன் கல்வாரி சிலுவையில் நம்மை சந்திக்கிறார்..*
இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
யோவான் 19:25-27
*அவிசுவாசிகள் இயேசு கிறிஸ்துவை சந்திப்பது தான் சுவிசேஷம்..*
உன்னைச் *சந்திக்குங்காலத்தை* நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.
லூக்கா 19:43-44
*விசுவாசிகள் இயேசு கிறிஸ்துவை சந்திப்பது தான் பாக்கியம்..*
ஆகையால் இஸ்ரவேலே, இந்தப் பிரகாரமாக உனக்குச் செய்வேன். இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிற படியினால் உன் தேவனைச் *சந்திக்கும்படி* ஆயத்தப்படு.
ஆமோஸ் 4:12
*Closing thought..*
*சந்திப்பின் நாள் சமீபம்..*
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்களை உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் *சந்திப்பின் நாளிலே* தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
1 பேதுரு 2:12
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment